politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

எடியூரப்பா மீது கடுப்பான ஈஸ்வரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சகத்தில் தேவை யின்றி தலையிடுவதாகவும், தனது துறைக்கு தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் 774 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளார் என்றும் அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கர்நாடக ஆளுநரிடம் நேரில் புகார்அளித்திருப்பதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகதலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

                                          **************

இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க முயற்சியா...?

பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்காகவே, கர்நாடகமாநிலம் `பசவகல் யாண் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார் பற்ற ஜனதாதளம், இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், “சாதி, மதம்என்று பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது” என மஜததலைவர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.

                                          **************

சாதி - மத அரசியல்  செய்கிறார் மம்தா! 

“தானொரு சாண்டில்ய பிராமண கோத்திரத்தைச் சேர்ந்தவர்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதை மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கண் டித்துள்ளார். “தான் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று ஒரு முதல்வரே கூறலாமா?” என்று கேட்டுள்ள ஒவைசி, “மம்தாவும் வர்ணாசிரமத்தை பின்பற்றுவது தெரிந்து விட்டது. இவருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே சாதி-மத அரசியல் செய்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

                                          **************

ரூ.400 கோடியில் பால்தாக்கரே நினைவகத்திற்கு அடிக்கல்

மும்பை, தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்கா அருகேபழைய அதிகாரப் பூர்வ மேயர் பங்களாவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. ரூ. 400 கோடி செலவில் அமைய உள்ள இந்த நினைவகத்துக்கு பால் தாக்கரே மகனும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே புதனன்றுஅடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு, பாஜகதலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                                          **************

பாலியல் புகாரில் கைதாகிறார் பாஜக எம்எல்ஏ?

அரசுவேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் கர் நாடக பாஜக எம்எல்ஏ ஜர்கிஹோலி வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டார். இந்த வழக்குநீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்தவாக்குமூலத்தின் அடிப்படையில், ஜர்கிஹோலி விரைவில் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

;