politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

கொரோனாவில் இருந்து  மகாராஷ்டிரா மீள்கிறது!

கொரோனா தொற்றுப்பரவலில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் மகாராஷ் டிரா மாநிலத்தில், தினந்தோறும் 60 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் திங்களன்று அந்தப்பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாக- 48 ஆயிரத்து 700 ஆக குறைந்தது. மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக அம்மாநில அமைச்சர்அமித் தேஷ்முக்கும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

                       *****************

ஒரு வாரம் முன்னதாகவே உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை

உச்சநீதிமன்றத் தின் நாட்காட்டியின் படி, மே 14 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட் டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று தீவிரத்தையொட்டி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில், இந்த தேதிகள் மாற்றியமைக்கப் பட்டு, மே 8 முதலே உச்ச நீதிமன்றத்திற்குவிடுமுறை விடுவதென முடிவு செய் யப்பட்டுள்ளது. 

                       *****************

ரூ.29 லட்சம் நன்கொடை தந்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

‘பல ஆண்டுகளாகஎனது மிகுந்த நேசத்திற்கு உரிய நாடு இந் தியா. இதுநாள்வரை நான் சந்தித்ததிலேயே இங்குள்ள மக்கள் மிகஅன்பானவர்கள், கனிவானவர்கள். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் இந்த நேரத்தில், மக்கள் பலரும்மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. எனவேதான், ஆக்சிஜன் சிலிண் டர்களுக்கான நான் பி.எம். கேர்ஸ் நிதிக்குரூ. 29.12 லட்சம் பங்களிப்பு செய்திருக்கிறேன்’ என்று ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸூக்காக ஆடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

                       *****************

தேர்தல் ஆணையம் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

‘கொரோனா தொற்று 2-ஆவது அலை பரவல் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தனது பொறுப்பில்இருந்து தப்பிக்க முடியாது என்பதை சென்னை உயர்நீதிமன்றம், மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. இந்தியத் தேர் தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் தேர்தல்நடத்திய முறை குறித்து, வாக் குப்பதிவுஅனைத்தும் முடிந்ததும் நாங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்று  திரிணாமுல் தலைவரும்மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

                       *****************

கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தார் உமர்!

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள்முதல்வருமான உமர் அப்துல்லா கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தார். இந் நிலையில், 18 நாட்களுக்கு பின்பு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது உறுதியாகிஇருக்கிறது.  விரைவில் குணமடைந்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று உமர் கூறியுள்ளார்.

;