politics

img

கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை.... பாஜக 100 இடத்திற்கு மேல் பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன்..பிரசாந்த் கிஷோர் மீண்டும் சவால்....

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக இருக்கும் பிரசாந்த் கிஷோர், வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார். 

கடந்த டிசம்பர் மாதம் இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்ட அவர், “பாஜக-வை ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றனர். உண்மையில் பாஜகமேற்கு வங்கத்தில் இரட்டைஇலக்கங்களை தாண்டவே போராடும். தயவுசெய்து இந்த டுவீட்டைப் பத்திரமாக வைத் துக் கொள்ளுங்கள். பாஜக அதைத் தாண்டி ஏதேனும் சிறப்பாகச் செய்தால், நான் இந்த இடத்தை (டுவிட்டர் சமூகவலைத்தளத்தை) விட்டு வெளியேறுகிறேன்” என்று சவால் விடுத்தார்.தற்போது, “இந்தியா டுடே” செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஒருபடி மேலேபோய், மேற்குவங்கத்தில் பாஜக 100 இடங் களுக்கு மேல் வென்றால், தனது தேர்தல் வியூக வகுப்பாளர் தொழிலிலிருந்தேவிலகி விடுவதாக மீண்டும் சவால் விட்டுள்ளார்.

“மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால் நான் இந்ததொழிலையே விட்டு விடுகிறேன். ஐபேக் (I-PAC) நிறுவனத்தை விட்டே விலகி விடுகிறேன். நான் வேறு ஏதாவது வேலைக்குச் செல்கிறேன். கண்டிப்பாக இந்த வேலையை செய்ய மாட் டேன். ஏனெனில் அதற்கு தகுதியானவனாக நான் இருக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், பாஜகவும் அமித்ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர். ஆனால்இது திரிணாமுல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிக்கும்யுக்தி-தான். வெறும் கூச்சல்போட்டால் மட்டும் தேர்தலில்ஜெயித்து விட முடியாது. பாஜகவின் சில கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை, மோடி கூட்டத் துக்கு மட்டும்தான் அதிகளவில் கூட்டம் சேருகிறது” என்று கிஷோர் தெரிவித்துள்ளார்.

;