politics

img

மும்பை போலீஸ் தேடிய குற்றவாளி மோடியுடன் பேசிக் கொண்டிருந்தார்...

பிரதமர் மோடியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போன்று சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்த இந்த படத்தை, பிரபல நாளிதழ் ஒன்றும் வெளியிட்டுள்ளது. இந்த நபர் மும்பை போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை மாநராட்சியின் முன்னாள் துணை மேயராக இருந்தவர். ஜெயலலிதாவின் பணத்தை பதுக்கி வைத்து திருப்பித் தராமல் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் ‘தலைமறைவு’ வாழ்க்கை நடத்தியவர். அகில இந்திய கராத்தே சம்மேளனம் என்ற அமைப்புக்கு தலைவராக இருந்தவர் கராத்தே கே.தியாகராஜன்.

அந்த அமைப்புக்கு பொதுச் செயலாளராக இருந்த பரத்சர்மா. இவர், மறைந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு தில்லியில் வலதுகரமாக இருந்து வந்தார். இந்த இருவருடன் பொருளாளராக இருந்தவர் வைரப் வட்சா. இந்த மூன்று பேரும்சங்கத்தின் பணத்தை மோசடி செய்தது, முறைகேடாக பயன்படுத்தியது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்ட காவல்துறையில் தற்போதைய கராத்தே சம்மேளன தலை
வர் லைகா தாரா புகார் செய்துள்ளார். மும்பை காவல் துறை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்பதால் தலைமறைவாக இருந்தவர்கள் பிறகு வெளியில் தலைக் காட்டதுவங்கினர். 

சென்னை திரும்பிய கராத்தே தியாகராஜன், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ‘அம்மா’ வின் ஆட்சியைதொடர்ந்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் சிலரது நல்லாசியுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைந்துள்ளார். அகில இந்திய கராத்தே சம்மேளனத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் அந்த பெயரில் தமிழ்நாட்டிலும் தனது கை வரிசையை காட்டியதாக புகார் எழுந்தது. இதற்கிடையில்,  கட்சி விரோத நடவடிக்கை மற்றும்ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டார் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அப்படியே ஓரங்கட்டப்பட்டதால், ரஜினிகாந்த் கட்சி துவக்கினால் அங்கு ஐக்கியமாகலாம் என்று இருந்தார். அதுவும்பொய்த்துப் போனது.இந்த நிலையில், அகில இந்திய கராத்தே சம்ளேனத்தின்பொதுச்செயலாளர் பரத் சர்மாவை தில்லியில் மும்பை போலீசார் கைது செய்தது தொடர்பான செய்தியில், தமிழகத்தைச் சேர்ந்த கராத்தே கே.தியாகராஜன் தலைமறைவாக இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அன்றைய தினத்தில்தான் அவர் பாஜகவில் கரைந்தார். பிப்ரவரி 14 அன்று சென்னை வந்த பிரதமர்மோடியை விமான நிலையத்தில் சந்தித்ததாக புகைப்படம்உலா வந்து கொண்டிருக்கிறது. சென்னை அடையாறு இல்லத்தில் மும்பை காவல்துறையினர் தேடிப் பார்த்தபோது தலைமறைவாகிய தியாகராஜன் பாஜகவில் அடைக்கலமானது தெரிய வருகிறது. ஆனால் விஷயம் பரபரப்பான வுடன், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தலை மறைவு ஆகவில்லை என்றும் கராத்தே தியாகராஜன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலரச் செய்யதமிழக பாஜக தலைவர்கள் பல்வேறு குறுக்கு வழிகளைகையாண்டு வருகிறார்கள். குறிப்பாக, கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, நிலம் அபகரிப்பு என ஏராளமான வழக்குகளில் சிறை சென்றது மட்டுமல்ல குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சென்னையின் பிரபல தாதாக்கள் கல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சாலை, சீர்காழி சத்யா, புதுச்சேரி எழிலரசி எனப் பலரையும் பாஜகவின் உறுப்பினராக சேர்த்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றும் முயற்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட் எண்ட்ரி கராத்தே தியாகராஜன்!

சி.ஸ்ரீராமுலு  

;