politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ராஜஸ்தானில் அரங்கேறிய சாதி ஆணவக் கொலை!]

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பிங்கி சைனி. இவருக்கு பிப்ரவரி 16-ஆம்தேதி பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்துவைத்தனர். ஆனால், பிங்கி திருமணம் நடந்த மூன்றே நாட்களில், வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். அத்துடன், தான் விரும்பிய ரோஷன் மஹாவர் (23) என்றவேறுசாதி இளைஞரை மணந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பிங்கியின் தந்தை சங்கர் லால், பிங்கியை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

                                             ****************** 

சட்டசபையில் சட்டையை கழற்றிய எம்எல்ஏ..!

“ஒரே தேசம் ஒரே தேர்தல்” குறித்து, கர்நாடக பேரவையில் நடந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, தர்ணா நடத்தினர். ஆர்எஸ்எஸ்-ஸின் கைப்பாவையாக சபாநாயகர் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். ஆவேசத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஸ்வர், தனது சட்டையையும் கழற்றினார். இதற்காக எம்எல்ஏ சங்கமேஸ்வரை, 7 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காகேரி உத்தர
விட்டுள்ளார்.

                                             ****************** 

மோடி படத்தை நீக்க டிஒய்எப்ஐ வலியுறுத்தல்!

கொரோனா சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என்று, கேரளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். “கேரளாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் மாநிலத்தில் இலவசகொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்என்பதால் அதனை நீக்க வேண்டும்”என்று சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மிதுன் ஷா மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

                                             ****************** 

முதல்வர் என்பதை  மறந்து பேசிய உத்தவ்!

“பால்தாக்கரேவின் இந்துத்துவா, செண்டியோ (உச்சி குடுமி), பூணூலோ அல்ல. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது டாம், டிக், ஹாரி ஓடிவிட்டனர். ஆனால் பால் தாக்கரே நின்றார். பாபர் மசூதியை சிவசேனாவினர் இடித்து இருந்தால் அதற்காக பெருமை அடைகிறேன் எனவும் அவர் கூறினார்” என்று உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பேசியதற்குஎதிர்ப்பு எழுந்துள்ளது. உத்தவ், தானொரு முதலமைச்சர் என்பதை மறந்து விட்டு பேசுவதாக மராட்டிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு ஆஸ்மி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

                                             ****************** 

சத்தீஸ்கர் காவல்துறைக்குதேர்வான 13 திருநங்கையர்!

சத்தீஸ்கர் காவல்துறையில் முதன்முறையாக 13 திருநங்கையர், ஏட்டு காவலர்களாகிள்ளனர். சலுகை அடிப்படை யில் அல்லாமல், தகுதி அடிப்படையில் வழக்கமான தேர்வுமுறைகளில் தேர்ச்சிபெற்று அவர்கள் காவலர் ஆகியுள்ளனர். இன்னும் 2 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். “பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இதை சாதித்துள்ளோம்” என்று 24 வயது திருநங்கை சிவன்யா பேட்டி அளித்துள்ளார்.

;