politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்

அசாம், மேற்குவங்கத்தில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்

கடந்த மார்ச் 27 அன்று முதற்கட்டமாக அசாமில் 47 தொகுதிகளுக்கும், மேற்குவங் கத்தில் 30 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 1 அன்று நடைபெறுகிறது.இரண்டாம் கட்டத்தில் மேற்கு வங் கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்ந்தது.

                                    ************

அமித்ஷா- சரத்பவார் சந்திப்பு நடக்கவில்லை!

என்சிபி தலைவர் சரத் பவார், மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித் ததாக வெளியான தகவலை சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் மறுத்துள்ளார். “சில விஷயங்களை அந்தந்த நேரத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையெனில் அவை குழப்பத்தை ஏற்படுத்திவிடும். சரத் பவார், அமித் ஷா இடையேஎவ்வித ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை என நான் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ள சஞ்சய் ராவத், “வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என்றும் குறிப்பிட் டுள்ளார்.

                                    ************

மோடி அரசு எனக்கு பாஸ்போர்ட் தர மறுக்கிறது 

“சிஐடி அறிக்கையை சுட்டிக் காட்டி பாஸ் போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கிறது. இந் தியாவின் பாதுகாப் புக்கு நான் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியுள்ளது. ஒரு முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாம். காஷ்மீரின் இயல்பு நிலை இப்படித்தான் இருக்கிறது” என்று பிடிபி கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                                    ************

ஹத்ராஸ் பற்றி அமித்ஷா ஏன் பேசவில்லை? 

“பாஜகவைச் சேர்ந்தவரின் தாயார் ஷாவா முஜூம்தர் எப்படிஉயிரிழந்தார் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், பாஜகஇந்த விவகாரத்தை தற்போது அரசியலாக் குகிறது. இந்த மரணத்தை காட்டி, வங்கமே இப்படித்தான் உள்ளது என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால், இதேஅமித்ஷா உ.பி.யின் ஹத்ராஸ் மாவட் டத்தில் பெண்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானபோது ஏன் பேசவில்லை?” என்று மம்தா பானர்ஜி கேள்விஎழுப்பியுள்ளார்.

                                    ************

ரூ. 5 ஆயிரம் கேட்கும் பாஜக தலைவர்கள்...

கொரோனா தொற்றுப் பரவலையொட்டி, 2020 மார்ச் 25 அன்று பொதுமுடக்கத்தை அறிவித்த மத்திய பாஜக அரசு, ரேசனில் 5 கிலோ அரிசிவழங்கியதோடு கடமையை முடித்துக் கொண்டது. மக்களின் கையில் பணம் வழங்க வேண்டும்என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த்பாட்டீல், மக்களின் கையில் ரூ. 5 ஆயிரம் பணம்
தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

;