politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

கருத்துக் கணிப்புக்கு  ஏப்.29- வரை தடை!

அசாம், மேற்குவங்கத்தில் வாக்குப் பதிவு துவங்கிவிட்ட நிலையில், தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும், மார்ச் 27 காலை 7 மணி முதல்2021 ஏப்ரல் 29 மாலை 7.30 மணி வரை,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை எந்த வகையிலும் வெளியிடவோ கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

                             ************

‘சவுகிதார் சோர் ஹை...’ ராகுல் ஆஜராக உத்தரவு

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடிதன்னை திடீரென ‘சவுகிதார்...’ (காவலாளி) என்று அழைத்துக் கொண்டார். அப்போது, மோடி அரசின் ரபேல் ஊழலை சுட்டிக்காட்டி, ‘சவுகிதார் சோர் ஹை...’ (காவலாளி ஒரு திருடன்) என்ற முழக்கத்தை எழுப்பி ராகுல் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அயோத்தி நீதிமன்றம் ராகுலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

                             ************

ஜனாதிபதி ஆட்சிக்கு தேவை எழவில்லை!

“100 கோடி ரூபாய் வசூல் தொடர்பான போலீஸ் ஊழல் குறித்து தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே அறிக்கை சமர்ப்பித் துள்ளார். அதில் உள் துறை அமைச்சருக் கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். இருப்பினும், பாஜக தொடர்ந்துகுடியரசுத் தலைவர் ஆட்சியை வலியுறுத்துகிறது. உண்மையில் மாநிலத்தில்அப்படி மோசமான ஒரு சூழ்நிலை தற் போது வரை ஏற்படவில்லை” என்று மகாராஷ்டிர துணைமுதல்வர் அஜித் பவார் பதிலளித்துள்ளார்.

                             ************

பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வல்லுறவு வழக்கு

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ்ஜர்கிஹோலி. 60 வயதான இவர், இளம்பெண்ஒருவரை ஏமாற்றிபாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக வீடியோ ஆதாரம் வெளியானது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் அளித்தபுகாரின் பேரில், ஜர்கிஹோலி மீது ஆசைவார்த்தை கூறி பாலியலுக்கு உட்படுத்துதல், பாலியல் தொல்லை, மோசடி, கொலைசெய்ய முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                             ************

நாடல்ல; மோடியின்  தாடிதான் வளருகிறது!

“பிரதமர் மோடி தன்னை விவேகானந் தர் என அழைத்துக் கொள்கிறார். சில நேரங்களில் ரவீந்திரநாத் தாகூர் என்றும் கூறிக்கொள்கிறார். ஆனால், நீண்ட தாடி இருப்பதாலேயே ஒருவர் தாகூர் ஆகி விட முடியாது. நாட்டில் மோடியின் தாடிமட்டுமே வளர்கிறது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சி நின்றுவிட்டது. இந்தியப்பொருளாதாரம் வீழ்ச்சி பாதையை நோக்கி நகர்கிறது” என்று திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள் ளார்.

;