politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

தில்லி அரசை முடக்கியதுமோடி அரசு!

தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அனைத்து அதிகாரங்களையும் ஆளு நருக்கே கொடுக்கும் வகை யிலும் ‘தில்லி அரசு தேசியத் தலைநகர் பிராந்தியதிருத்த மசோதா-2021’(NCT) என்ற ஒன்றை மோடிஅரசு கொண்டுவந்தது. இதனை மார்ச் 22 அன்றுமக்களவையில் நிறைவேற்றிய மோடி அரசு தற்போது இந்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மாநிலங்களவையிலும் நிறைவேற்றியுள்ளது.

                             ************

பர்தா அணிய தடைகோரும்பாஜக அமைச்சர்!

முத்தலாக் தடை சட் டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம் பெண்களை பர்தா அணிவதிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேசபாஜக அமைச்சர் ஆனந்த்ஸ்வரூப் சுக்லா சர்ச்சையை ஆரம்பித்துள்ளார். முஸ்லிம்களின் தொழுகைக்காக மசூதிகளில் ஒலிக்கப்படும் பாங்கு ஒலியைத் தடை செய்ய வேண்டும் என்றும் அண்மையில்இவர் கோரிக்கை விடுத் தது குறிப்பிடத்தக்கது.

                             ************

தரம் தாழ்ந்து  மம்தாவை பேசிய பாஜக தலைவர்

“மம்தா பானர்ஜி ஏன்அவர் சேலை கட்டி வருகிறார். பேசாமல் பெர்முடாஸ் டவுசர் அணிந்து வர வேண்டியதுதானே..!” என்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர்திலீப் கோஷ் பேசியிருந் தார். மம்தா ஒரு காலில் பாண்டேஜூடன் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செல்வதைத் கேலி செய்யும் விதமாகவே திலீப் கோஷ் இவ்வாறு பேசியிருந்தார். இது தற்போது பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

                             ************

விமானப்படையில் 405 விமானிகள் பற்றாக்குறை!

இந்திய விமானப் படையில் ஒப்புதல் அளிக் கப்பட்ட விமானிகள் எண் ணிக்கை 4 ஆயிரத்து 239ஆகும். அவற்றில் தற் போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர்;  405 விமானிகள் பற்றாக்குறை உள் ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 260 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத நாயக் தெரிவித்துள்ளார்.

                             ************

3 பேருக்கு தூக்கு

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகரில் கடந்த 2018ஜனவரி 2 அன்று பள்ளிக்குச் சென்ற 16 வயதுசிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜுல்பிகர் அப்பாஸி (20), தில்ஷாத் அப்பாஸி (21), இஸ்ரேல் (22) ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

;