politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்

ஜீன்ஸ் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முழங் கால்களைக் காட்டுவதால் சமூகம் சீர்கெட் டுப் போவதாக உத்தரகண்ட் பாஜக முதல்வர்தீரத் சிங் ராவத் பேசியிருந்தார். இதற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கட்காரிஉள்ளிட்டோர் முழங்கால்களை காட்டும்வகையில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு, “அடக் கடவுளே, இதிலும் முழங்கால்கள் தெரிகின்றன” என பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் கிழிந்தஜீன்ஸ் விவகாரத்தில் எங்களை ஏன் இழுக்கிறீர்கள்? என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆத்திரப்பட்டுள்ளார்.

                                 ***************

டீயையும் யோகாவையும்  அழிக்க சதி நடக்கிறது!

“என்னை போன்ற ஒரு டீ வியாபாரியை காட்டிலும் தேயிலைதோட்ட தொழிலாளிகளின் பிரச்சனைகளை யாரல் புரிந்துகொள்ள முடியும்? ஆனால், இந்திய டீ மற்றும் யோகாவின் அந்தஸ்தை குறைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அசாமில் உள்ள தேயிலைத் தோட்டங்களை அழிக்க திட்டமிடுகின்றனர். அழகிய நிலமான அசாமை அவமதிக்க முயல்கின்றனர்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

                                 ***************

கொரோனா பணத்தை  மோடி திருடி விட்டார்...

“கொரோனா நெருக் கடி மேலாண்மைக் காக வைத்திருந்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடி திருடிவிட்டார்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். “ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கிகளை விற்று நாட்டு மக்களிடம் இருந்து பல லட்சம் கோடிக்கணக்கான ரூபாயை பாஜக திருடி விட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம், பிரதமர் கேர்ஸ் நிதி ஆகியவை என்ன ஆனது?” என்பது குறித்து பாஜக உண்மையை சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

                                 ***************

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் அமைதியில்லை!

“கடந்த கால சம்பவங்களை மறந்து விட்டு, இந்தியா, பாகிஸ்தான் உறவை முன்னெடுத்துச் செல் வதற்கு அந்த நாட்டின் ராணுவ தளபதி அழைப்பு விடுத்தது சாதகமான முன்னேற்றம்” என்று பிடிபிகட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள்முதல்வருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார். “காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்காமல், இந்தியத் துணைக்கண் டத்தில் அமைதிக்கு வாய்ப்பே இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’

அயோத்தியில் நடைபெற்றுவரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கற் கள், தூண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இலங்கையில் சீதையை இராவணன் சிறை வைத்திருந்ததாக கூறப்படும் ‘சீதா எலியா’ என்ற பகுதியில் இருந்தும் அயோத்திக்கு ‘கல்’ எடுத்து வரப்படுகிறது. இந்த கல், மயூரபதி அம்மன் கோவிலில் வைத்து இந்தியத் தூதரிடம் வழங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

;