politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

தேஷ்முக் ராஜினாமா செய்யமாட்டார்

ரூ. 100 கோடி கமி‌ஷன் கேட்டதாக புகார்அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யமாட்டார் என தேசியவாத காங்கிரஸ்அறிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் அனில் தேஷ்முக் மீது புகார் கூறப்பட் டுள்ளதை நாங்கள் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் புகார்களை கூறுகிறார் என்று என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

                                  *******

மேற்குவங்கத்தில்  சிஏஏ அமல்படுத்தப்படும்!

மேற்கு வங்கத்தில் ஞாயிறன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை (சோனார் பங்களா சங்கல்ப பத்திரா) வெளியிட்டது. அதில், “சட்டமன்றத் தேர்தலில்பாஜக வெற்றிபெற் றால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம்; துர்கா பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது; மஹிஸ்யா, திலி மற்றும் இதர இந்து பிரிவினருக்கு ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று கூறியுள்ளது. 

                                  *******

எதற்குத்தான் மோடி வருத்தப்படுவார்..?

“அசாமின் பிரம்மபுத்திரா நதியில் வெள் ளம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டனர். ஆனால், மோடி வரவில்லை. அவ் வாறு வராததற்காக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தாரா? சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், 5 இளைஞர்கள்கொல்லப்பட்டனர். மாநிலமே தீப்பற்றிஎரிந்தது. அப்போது மோடி கவலைப் பட்டாரா? தேயிலைத் தோட்டங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகூட இல்லை என பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஊதியமும் உயர்த்தப்படவில்லை. அதுகுறித்தாவது பிரதமர் மோடி கவலைப்பட்டாரா?” என்று பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

                                  *******

சுவேந்து விஷயத்தில் நான் ஒரு கழுதை..!

மேற்குவங்கத்தில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, எம்.பி.யாக இருந்த அவரது தந்தை சிசிர் அதிகாரி ஆகியோர் பாஜகவுக்கு தாவியதால் மேற்குவங்க முதல் வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “சுவேந்து அதிகாரி குடும்பம், ரூ. 5 ஆயிரம் கோடி சொத்துசேர்த்து விட்டதாக நான் கேள்விப்பட் டேன். ஆனால், அது எனக்கு தெரியாது. அவர்களின் உண்மை முகத்தை அறியாமல் போய்விட்டேன். நான் ஒரு பெரிய கழுதை” என்று தன்னைத்தானே நொந்து கொண்டுள்ளார்.

                                  *******

பரிகார பூஜை நடத்தும் பாஜக கட்சியினர்...

இமாச்சலைச் சேர்ந்த ஒரு பாஜக எம்.பி. தில்லியில் தூக்கிட்டு இறந்தார். அமித் ஷாவிற்குநெருக்கமான குஜராத் எம்.பி. ஒருவரும் இதேபோல இறந்தார். இதனால், தங்கள் கட்சியினருக்கு யாரேனும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை வைத்து விட்டார்களோ? என்று பாஜக தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகவும், இதனை மாற்ற, கேரளத்திலிருந்து மாந்திரீகர் ஒருவரை தில்லிக்கு வரவழைத்து, கட்சியின் தலைமைஅலுவலகம் மற்றும் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் இடங்களில் யாகம் நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

;