politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

நாக்பூரில் உள்ள சக்திதான் நாட்டை பிளவுபடுத்துகிறது

“சமூகத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக வெறுப்புணர்வை பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியோ அன்பையும், நல்லிணக்கத்தையும் உறுதி செய்கிறது. நாக்பூரில் ஒரு சக்தி (ஆர்எஸ்எஸ்) உள்ளது. அதுதான் ஒட்டுமொத்த தேசத்தையும் கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் எதிர்காலமாக இருக்கிறஇளைய தலைமுறையினர் அன்பினாலும், நம்பிக்கையினாலும் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

                                       ******************

அன்று பணமதிப்பு நீக்கம்...இன்று வங்கி மதிப்பு நீக்கம்!

“இன்று நாட்டில் சிறு தொழில்கள் தொடங்கி பெருந் தொழில்கள் வரை பெரும் பிரச்சனையை சந்தித்து வருகின்றன. இதற்கு பிரதமர் மோடியே காரணம். ஹால்டியா துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யவும் மோடி ஆலோசித்து வருகிறார். அனைத்தையும் விற்பனை செய்துவிடுவது என்பதே பிரதமர் மோடியின் ஒரே திட்டம். முன்பு பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடி இப்போது வங்கிமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்” என்று மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். 

                                       ******************

மம்தா ஆரம்பித்து வைத்தது இன்று பற்றி எரிகிறது

“பாஜகவை எதிர்த் துப் போராட விரும்புகின்ற இடதுசாரி நண் பர்கள் திரிணாமுலுக்கு வாக்களியுங் கள்.. அனைவரும் ஒருங்கிணைந்து நிற் போம், வாருங்கள்” என்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு, ஜாக்ரம் மாவட்டசிபிஎம் தலைவர் பிகாரி பாஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். “வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் வந்துவிடக்கூடாது எனதிட்டமிட்டு, தீவிரமாக வேலைசெய்துவிட்டு, இப்போது, தோல்வி பயத்தால் மம்தா என்னென்னவோ பேசுகிறார். தான்தொடங்கிவைத்த காரியத்துக்கு உரியவிளைவுகளை அவராலேயே எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்”என்று சாடியுள்ளார்.

                                       ******************

சாமியார்களுக்கு  தடுப்பூசி போட வேண்டும்!

“நமது நாட்டில் பலதுறவிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் ஆதார் அட்டை இல்லை. அவர்களிடம் ஸ்மார்ட் போனும் கிடையாது. அவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்றுகொண்டே இருப்பவர்கள் ஆவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்று சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி  நாடாளுமன்றத் தில் பேசியுள்ளார்.

                                       ******************

புடவை அணிந்துதான் ராணிகள் போரிட்டார்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களே சமூக சீர்கேட்டுக்குக் காரணம் என்று பேசி கடும் விமர்சனங்களுக்கு உள்ளான உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத், தனது பேச்சுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஜீன்ஸ் அணிவதற்கு எதிரானவன் நான் அல்ல.கிழிந்த ஜீன்ஸ் அணிவதைத்தான் சுட்டிக்காட்டி பேசினேன்” என்று கூறியுள்ளார். அத்துடன், “ஜான்சி ராணி லட்சுமி பாய் போன்றோர் புடவைஅணிந்து கொண்டே போரிட்டு வென்ற வரலாற்றுஉதாரணங்களும் இருக்கின்றன” என்று மறுபடியும் முருங்கை மரம் ஏறியுள்ளார்.

;