politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மக்கள் மீது இருமுனை தாக்குதல். பெட்ரோல், டீசல் விலை உயர்வுபிப்ரவரி இறுதியில் மொத்தம் 5.03 சதவீதம் அளவிற்கு பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இது உணவு பணவீக்கத்தை 3.11 சதவீதத்திலிருந்து 3.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, 2021ஜனவரி இறுதி கணக்கின்படி நாட்டின் தொழிற்சாலை பொருள் உற்பத்தி 1.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. முந்தைய மாதம் 1.5 சதவீதம்வளர்ச்சி என்று கணக்கு காட்டப்பட்டிருந்தது, தவறு என்பதும் தெரிந்துவிட்டது.   மோடியின் கொள்கைகள் மக்கள்மீது துன்பங்களை சுமத்துகிறது.அதே சமயத்தில் கூட்டுக் களவாணி முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் கொழுக்கின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் பொருட்கள் விற்பனையாகவில்லை; உற்பத்தி சுருங்குகிறது. மோடி அரசின் அழிவுப்பூர்வமான கொள்கைகள் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

                                                 ****************

இந்தியா குறித்த பொய்யான கருத்தாக்கத்தை கட்டமைக்க நமது மதச்சார்பின்மை ஜனநாயக இந்தியாவை அழிப்பது என்பது ஒரு முக்கியதேவையாக பா.ஜ.க.வுக்கு உள்ளது. மாற்றுக் கருத்தை நசுக்க புதிய சட்டங்களும் விதிமுறைகளும் நாள்தோறும் அறிவிக்கப்படுகின்றன. சுய கட்டுப்பாடுஎனும் போர்வையில் ஊடகங்களை அரசின் “கெஜட்டாக” மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்த ஜனநாயக விரோத செயல் தோற்கடிக்கப்பட வேண்டும்.

                                                 ****************

கோவிலுக்குள் தண்ணீர் குடிக்க வந்த இஸ்லாமிய சிறுவனை இந்துத்துவா அமைப்புகள் கடுமையாக தாக்கியுள்ளன. ஒவ்வொரு அமீர்/அமித்/அந்தோணி/அம்ரீந்தர்/நர்கீஸ்/நூடன்/ நவோமி/நூர் போன்ற அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பாதுகாப்பாக இல்லையெனில் இந்தியாவும் பாதுகாப்பாக இல்லை என்றுதான் பொருள்.வெறுப்பையும் வன்முறையையும் ஊக்கப்படுத்தி ஆதரிக்கின்ற சக்திகள்தோற்கடிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இத்தகைய மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியும்.

                                                 ****************

அசாமில் மத்திய அரசாங்கத்தின் காகிதத் தொழிற்சாலை மூடப்பட்டதால் 83 தொழிலாளர்கள் உயிரிழப்பு. 79 பேர் மருத்துவ வசதி இல்லாததாலும் நான்கு பேர் தற்கொலையும் செய்துகொண்டனர்.தனது சொந்த ஆலையை மூடிய மோடி அரசாங்கத்தை கண்டிக்கும் தொழிலாளர்கள் மோடியின் “பொய்கள் மற்றும் ஏமாற்று வேலையை” விட வேறு எது ஒன்றும் நல்லதுதான் எனக் கூறுகின்றனர்.திரு. மோடி அவர்களே தமது உழைப்பின் மூலம் பொருட்களின் மதிப்பைஉருவாக்கும் உழைப்பாளிகளை கொல்வதை நிறுத்துங்கள். இந்த மதிப்பை பணமாக மாற்றி தமது சொத்துக்களை அதிகரித்துக்கொள்ளும் கூட்டுக்கொள்ளை களவாணிகளை ஆதரிப்பதை நிறுத்துங்கள்.

;