politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி அரசாங்கம் கார்ப்பரேட் வரியை30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாககுறைத்தது. அதன்மூலம் கார்ப்பரேட்டுகள் 1.45 லட்சம்கோடி ரூபாய் பலன் பெற்றனர். இவ்வாறு பலன் பெற்றவர்கள் குறைந்தபட்சம்ஆண்டுக்கு ரூ.400 கோடி வணிகம் செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை வெறும் 0.9 சதவீதம் தான்.

                                      *****************

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் காட்டுமிரண்டித்தனமான கும்பல் பாலியல் பலாத்காரம்/ தலித் பெண் குழந்தைகளின் படுகொலைகள் ஆகியவை நிகழும் சூழலில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 45 சதவீதம் அதிகரித்துள்ளன. அத்தகைய ஆபத்தான மனிதத்தன்மைக்கு முற்றிலும் விரோதமான நமதுசமூகத்தின் சூழல் ஆளும் பாஜகவின் வெறுப்பு கலாச்சாரம் மற்றும் வன்முறைக்கு துதிபாடும் கயமைத்தனத்தின் காரணமாக மேலும் வலுவடைகிறது.

                                      *****************

தனியாருக்கு தாரைவார்க்கும் முதல் 12 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. தேசத்தின் சொத்துக்களை பகற் கொள்ளை அடிக்கும் நீசத்தனமான காட்சிகள் தொடங்குகின்றன. இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு அடித்தளமாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுகார்ப்பரேட்டுகளுக்கு அவர்களின் உச்சபட்ச லாபக் கொள்ளைக்காக சமர்ப்பிக்கும் திட்டத்தை பிரதமர் அமலாக்குகிறார்.இந்தியாவின் சுய சார்பு அல்ல; மாறாக “சுய சரணாகதி” பாதையில்தேசத்தைபிரதமர் மோடி அவர்கள் அழைத்துச் செல்கிறார்.

                                      *****************

இந்தியாவில் தொழில் முதலீடுகள் கடும் வீழ்ச்சி. “மேக் இன் இண்டியா” எனும் வாய்ப்பந்தல் மீண்டும் ஒருமுறை மோசடி என்பது அம்பலமாகியுள்ளது. மோடியின் கொள்கைகள் நமது பொருளாதாரத்தை அழித்து கொண்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு தொழில் முதலீடுகள் எண்ணிக்கையில் 40 சதவீதம், நிதி அடிப்படையில் 37 சதவீதம் வீழ்ச்சி. வேலையின்மையும் துன்பங்களும் மேலும் அதிகரிக்கும். மோடியின் கொள்கைகளை எதிர்ப்போம்; பின்னுக்குத் தள்ளுவோம்.

                                      *****************

சில்லறை பணவீக்கம் செங்குத்தாக உயர்வு.பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, இந்த பணவீக்கம் கடுமையாக உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் வீழ்ச்சி அடையும். மக்களின் வாழ்வாதாரம் மீது மோடி அரசாங்கத்தின் இரக்கமற்ற தாக்குதல்களை முழு வலிமையுடன் தடுப்போம்.

;