politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியா இப்போது ஒரு ‘‘தேர்தல்கள் நடைபெறும் எதேச்சதிகார’’ தேசம்.மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவில் மாற்றுக் கருத்து முன்வைப்பவர்களை அடக்க தேசத்துரோக வழக்கு/மான நஷ்ட வழக்கு/பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றை தவறான முறையில்ஏவிவிட்டுள்ளது.2013 இல் உச்சத்தில் இருந்த இந்தியாவின் ஜனநாயகம் பின்னர் அதிவேகமாக சரிந்து விட்டது என ஆய்வறிக்கை கூறுகிறது. என்னே வெட்கக்கேடு!

                                     **************  

இந்தியர்களாகிய நம்மை மோடி ஜி இப்படித்தான் சுரண்டுகிறார். ஒரு மும்பைவாசியின் சராசரி ஆண்டு வருவாய் 8000 டாலர். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்வாசியின் சராசரி வருவாய் 77,000 டாலர். அதாவது கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம். ஆனால் மோடியின் தவறான கொள்கை காரணமாக நியூயார்க்வாசியைவிட ஒரு மும்பைவாசி பெட்ரோலுக்கு 65% கூடுதலாக தருகிறார்.மோடியின் சுரண்டல் தனித்துவம் வாய்ந்தது தான்!

                                     **************  

ஊரடங்கு காலத்தில் நகர்ப்புற வேலையின்மை இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக்கு முன்பே அதிகரிக்க தொடங்கிய வேலையின்மை திட்டமிடப்படாத ஊரடங்கு காலத்தில் மிகவும் மோசமானது. தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும் வேலையின்மை பலரின் வாழ்வாதாரங்களை நசுக்கிக் கொண்டுள்ளது. வேலை இல்லாதோருக்கு இப்பொழுதாவது மோடி அரசாங்கம் மாதம் ரூ.7,500 நேரடி நிதி உதவி தரவேண்டும்.

                                     **************  

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74%க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறையில் உள்ள காப்பீட்டுத் துறை நமது பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்த நிதி ஆதாரங்களை பெரிய அளவுக்கு திரட்டி தருகிறது. மக்களின் வாழ்நாள் சேமிப்பும் காப்பீட்டுத் துறையில் உள்ளது. இத்தகைய காப்பீட்டுத் துறை இப்பொழுது சர்வதேச நிதி மூலதனத்திற்கு அதிகபட்ச லாபக் கொள்ளை அடிக்க தாரைவார்க்கப்படுகிறது.இது இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிக மிக ஆபத்தானது. மோடி அரசாங்கமே உடனடியாக இதனை நிறுத்து!

;