politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

நானும் ராமர், அனுமன்  பக்தன்தான்...

“தீர்த்த யாத்திரை யோஜனா” என்ற பெயரில் மூத்த குடிமக்களுக் கான இலவச புனித யாத்திரை திட்டம், ஏற் கெனவே தில்லியில் அமலில் இருக்கும் நிலையில், தற்போதுஇலவசமாக அயோத்தி புனித யாத் திரை திட்டத்தையும் அம்மாநில முதல்வர்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அத்துடன், தானும் ராமர், அனுமன் பக்தன்தான்என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தேசபக்தி திட்டம் என்ற பெயரில், தில்லி முழுவதும் 500 இடங்களில் தேசியக்கொடி கம்பங்கள் அமைக்கும் திட்டத்தையும் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                  *************

அரசு அதிகாரிக்கு நெருக்கடி: பாஜக நிர்வாகி மீது வழக்கு!

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டம் பண்டேல்கண்ட் மண்டல பாஜக விவசாயப்பிரிவு துணைத்தலைவராக இருப்பவர் அவதேஷ் மிஸ்ரா. இவரதுமனைவி பாஜக மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், குறிப்பிட்ட சிலரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொல்லி, அவதேஷ் மிஸ்ராநெருக்கடி கொடுத்ததாக, வட்டாட்சியர் கணேஷ் பிரசாத் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னிடம் தவறாக நடந்ததாகவட்டாட்சியர் கணேஷ் பிரசாத் மீது அவதேஷ் மிஸ்ராவின் மனைவி புகார் கொடுத்து உள்ளார்.

                                  *************

உத்தரகண்ட் மாநிலத்தில் 20 ஆண்டில் 9 முதல்வர்கள்! 

2,000-ஆவது ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து உத்தரகண்ட் தனி மாநிலம் ஆனது. அப்போது முதல் கடந்த 20 ஆண்டுகளில் மொத் தம் 9 பேர் முதல்வர் களாகி விட்டனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி. திவாரியைத் தவிர ஒருவர் கூட முழுமையாக பதவியில் இருந்ததில்லை. திவாரி மட்டும் 2002முதல் 2007 வரை 5 ஆண்டுகள் பதவிவகித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த நித்யானந்த் சுவாமி, பகத்சிங் கோஷ்யாரி, புவன் சந்திர கந்தூரி, ரமேஷ்பொக்ரியால், விஜய் பகுகுணா, திரிவேந்திர சிங் ராவத் என அனைவருமே 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு என்றே பதவி வகித்துள்ளார். காங்கிரசின் ஹரீஷ்ராவத்தும் முழுமையாக முதல்வர் பதவிவகிக்கவில்லை.

                                  *************

பிரிட்டன் நாடாளுமன்றம் விவாதிப்பதில் தவறில்லை!

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்ட பாதகங்கள் குறித்து,பிரிட்டன் நாடாளுமன் றம் விவாதம் நடத்தியதற்கு இந்திய அரசுஎதிர்ப்பு தெரிவித்திருந்தது. பிரிட்டன் தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கமும் கேட்டிருந்தது. இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, பிரிட்டன் நாடாளுமன்றம் விவாதித்ததில் எந்தத்தவறும் இல்லை. ஜனநாயக நாடுகளில் இத்தகைய விவாதங்கள் ஏற்கக் கூடியதே! என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரம் உள்ளிட்டவை பற்றி நாம் பேசியதில்லையா? என்றும் தரூர் கேட் டுள்ளார்.

;