politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இரண்டுமடங்காக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் மூலம்52,537 கோடி ரூபாய் வரி வருவாய் பெறப்பட்டது. இந்தாண்டு இது 3,00,000கோடியாக உயர்ந்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படியே மக்கள் மீது ஏராளமான துன்பங்களும், வரலாறு காணாத விலைவாசி உயர்வும் சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் மீதான இந்த கிரிமினல் தாக்குதல்கள் எதிர்க்கப்படும், முறியடிக்கப்படும்.

                                            ****************

நுகர்வோர் விருப்ப குறியீடு அதாவது நுகர்வு பொருட்களை வாங்கும் நுகர்வோர் விருப்பம் பற்றிய குறியீடு எண் கடந்தாண்டு பிப்ரவரியில் 105.3 ஆக இருந்தது. இந்தாண்டு 55.1 என கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மோடியின் தவறான கொள்கைகள் - திட்டமிடப்படாத ஊரடங்கு - கொடூரமான வேலையின்மை . வானை நோக்கி உயரும் விலைவாசி ஆகியவை மக்களின் வாங்கும் சக்தியை மேலும் அழித்துவிட்டன. 

                                            ****************

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தரப்படும் மானியம் 2021 - 22 பட்ஜெட்டில் பாதியாக குறைக்கப்பட்டது. விலையேற்றத்தின் காரணமாக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பெற்ற பெரும்பான்மையான ஏழைமக்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்பியுள்ளனர். பெட்ரோல் நிலையங்களில் சிரித்துக் கொண்டிருக்கும் மோடி படத்தை அகற்றியது போல உஜ்வாலா திட்டத்தின் வெற்றி என சிரித்துக் கொண்டிருக்கும் மோடியின் படங்களை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

                                            ****************

கடந்த 33 மாதங்களில் 5,85,472 கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் இல்லை. ஆனால் மோடியின்கூட்டுக்கொள்ளை களவாணிகளுக்கு தள்ளுபடி என்ற பெயரில் பகற்கொள்ளை. கடனை வசூலித்திடுங்கள். மக்களின் சேமிப்பை காப்பாற்றுங்கள். ஏமாற்றிய முதலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்.

;