politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழங்க தடை இல்லையாம்...

தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை எழுப்புவதால், சமூக ஒற்றுமை சீர்குலையும் வாய்ப்பு உள்ளது. மேலும், இவ் வாறு மத முழக்கத்தை எழுப்புவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இது குற்றமும் ஆகும்; எனவே ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்திற்கு தடை விதிக்க வேண்டும்என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்எம்.எல். சர்மா வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு
தள்ளுபடி செய்துள்ளது.

                                    *****************

ஆதித்யநாத்திற்கு பிண்டதானம் உ.பி.யில் ஒருவர் கைது!

இந்து மதத்தில் இறந்தவர்களுக்கே பிண்டதானம் எனும்சடங்கு செய்யப்படுகிறது. இந்நிலையில், உ.பி. மாநிலம் பல்லியாகங்கைக் கரையில், உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் படத்தை வைத்து, அதற்குபிண்டதானம் செய்ததாக பிரிஜேஷ்யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள் ளார். ஐந்து பண்டிதர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

                                    *****************

மோகன் தெல்கர் மரணம்: சபாநாயகரிடம் முறையீடு

தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி சுயேட்சை எம்.பி. மோகன் தெல்கர் பிப்ரவரி 22-ஆம் தேதி மர்மமான முறையில் தற் கொலை செய்து கொண் டார். அவரது மரணத்திற்கு பாஜக தலைவர் ஒருவரின் மிரட் டலே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், தலேகரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண் டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சிஎம்.பி.க்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

                                    *****************

விசாரணையைத் துவங்கியது என்ஐஏ!

இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி யின் வீட்டு முன்பு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார், நிறுத்தப் பட்டு இருந்தது அண் மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புக் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், மத்திய பாஜக அரசு தானாகவே முன்வந்து, தேசிய புலனாய்வு முகமையின் (NIA) விசாரணைக்கு உத்தரவிட் டது. என்ஐஏ-வும் தற்போது விசாரணையைத் துவங்கியுள்ளது. மகாராஷ்டிர அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.

                                    *****************

அசாமில் 173 பேர்  வேட்புமனு தாக்கல்!

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27 அன்றுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 47 தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி, காங்கிரஸ்- இடதுசாரிக் கூட்டணி என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 173 பேர் வேட்புமனு செய்துள்ளனர். இறுதிவேட்பாளர் பட்டியல் மார்ச் 12 அன்று வெளியாக உள்ளது.

;