politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியாவின் நிதித்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நிதித்துறை ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் இறங்குகிறார்கள். மார்ச் 15, 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், மார்ச் 17 அன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம், மார்ச் 18 அன்று எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தம் என தொடர் போராட்டம் நடைபெற இருக்கிறது.இதையொட்டி பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் நேரடியாகசந்தித்து, நிதித்துறை நிறுவனங்கன் தனியார்மயத்திற்கு எதிராக அரசிடம் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்த ஊழியர்களின் எழுச்சிமிகு போராட்டம் வெல்லட்டும்.

                                                          *******

2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) என்ற கொடிய சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஒரே ஆண்டில் 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1948 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக் கூறும் அனைவரும் தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு, இந்த சட்டத்தின் கீழ் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு முதலே இந்த சட்டத்தை அமலாக்கும் தீவிரம் அதிகரித்து வருகிறது. தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது, போராட்டங்களை ஒடுக்குவது, சுதந்திரமாக செய்தி வெளியிடும் ஊடகங்களை அடக்குவது உள்ளிட்ட நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டு உலகஅளவில் சுதந்திரத்தின் நிலை எப்படி இருக்கிறது என்ற ஆய்வில், இந்தியாபாதியளவு மட்டுமே சுதந்திர நாடாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேசத்திற்கு எத்தனை பெரிய இழிவு. 

                                                           *******

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன் பெறும் மக்களின் எண்ணிக்கையை கிராமப்புறங்களில் 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்தும் நகர்ப்புறங்களில் 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைத்தும் நிதி ஆயோக் ஒரு முன்மொழிவை மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது. இது மிகவும் கொடூரமானது. பெருவாரியான மக்களை பட்டினியின்பிடிக்குள் தள்ளக்கூடியது. ஏற்கெனவே பெருவாரியான எண்ணிக்கையிலான மக்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்துவதற்காக பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உணவு தேவைப்படும் அனைவருக்கும் தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும். மிக கொடிய இந்த ஆலோசனைளை நிதி ஆயோக் திரும்பப் பெற வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அப்டேட் கருத்துக்களுக்கு கீழே உள்ள சமூக வலைத்தள லிங்க்கை கிளிக் செய்யவும்...  

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர்  : https://twitter.com/SitaramYechury

;