politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

107 நாடுகள் கொண்ட உலக பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் மோசமான நிலையில் உள்ளது. கடும் பட்டினி உள்ள தேசமாக இந்தியா தொடர்கிறது. பெரும்பான்மையான நமது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் மலைக்கவைக்கும் டாலர் பில்லியனர்களின் வஞ்சக வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். 2021ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் பத்து பெரும் பணக்காரர்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனாவாலா, உதய் கோடக், ராதாகிஷன் தமனி, திலீப்சங்வி, குமாரமங்கலம் பிர்லா, சைரஸ் மிஸ்ட்ரி, ராகுல் பஜாஜ் ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் இந்திய நாட்டின் ஒட்டு மொத்த செல்வத்தையும் குவித்து வைத்திருக்கக்கூடிய பெரும் கார்ப்பரேட்டுகளாக வலம் வருகிறார்கள். 137ஆக இருந்த மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை2021ல் 177ஆக அதிகரித்திருக்கிறது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிமுதல் பெரும் பணக்காரராக தொடர்கிறார். அதானி நிறுவனத்தின் அதிபர் கவுதம் அதானி இரண்டாவது இடத்திலும், எச்.சி.எல் நிறுவனத்தின் ஷிவ்நாடார் மூன்றாவது இடத்திலும் தொடர்கிறார்கள். ஒரு ஆண்டில் மட்டும் அதானி குடும்பத்தின் செல்வம் 88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அம்பானி
குடும்பத்தின் செல்வம் 24 சதவீதமும், பிர்லா குடும்பத்தின் செல்வம் 83 சதவீதமும் அதிகரித்துள்ளது. பில்லியனர்களின் வளர்ச்சிதான் மோடியின் முன்னுரிமை! இது கிரிமினல் குற்றம்.

                                                *************** 

மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை எது என்பதை இந்த இரண்டு புகைப்படங்கள் மிகத் தெளிவாக பறைசாற்றுகின்றன.அன்று: இடம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் திரும்ப இலவச ரயில்களை விடுவதற்கு மோடி அரசாங்கம் மூர்க்கத்தனமாக மறுத்தது. அந்த துன்பமான காலத்திலும் கட்டணம் வசூல் செய்தது.இன்று: கொல்கத்தா மோடி பேரணிக்கு பா.ஜ.க. 60 லட்சம் செலவு செய்து இலவச ரயில்களில் ஆட்களை கூடி வருகிறது.மோடி அரசாங்கத்தில் தாக்குதல்கள் சாதாரண மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. இது கொடூரமான மனிதாபிமானமற்ற செயல்.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அப்டேட் கருத்துக்களுக்கு கீழே உள்ள சமூக வலைத்தள லிங்க்கை கிளிக் செய்யவும்...  

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர்  : https://twitter.com/SitaramYechury

;