politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

இனி அத்வானியும்  போட்டியிடலாம்..!

அமித்ஷா பாஜக தலைவராக இருந்தபோது, 75 வயது ஆனவர்களுக்கு பாஜக-வில் பதவி கிடையாது என்று விதி உருவாக் கப்பட்டது. இதைச் சொல்லியே 2019 தேர்தலில் அத்வானி, ஜோஷி உள்ளிட்டோருக்கு எம்.பி. சீட் மறுக்கப்பட்டது. ஆனால், கேரளத்தில் 89 வயதான மெட்ரோ ஸ்ரீதரனை தங்களின் முதல்வர்வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி, 89 வயது ஸ்ரீதரனுக்கு பதவிகொடுக்கும்போது, அத்வானி, எம்.எம்.ஜோஷி மற்றும் சாந்த குமார் ஆகியோருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என்று ‘செக்’ வைத்துள்ளார்.

                              **************

நானும் அப்படி சொல்லவில்லை...!

பாஜகவின் கேரள மாநில முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ ஸ்ரீதரன்’ பெயரை தெரியாமல் கூறிவிட்டதாக, மத்திய இணையமைச் சர் முரளிதரன் பல்டி அடித்திருந்தார். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரனும் அந்தர் பல்டிஅடித்துள்ளார். “பாஜக முதலமைச்சர்வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை. மக்களும் கட்சியினரும் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்க விரும்புகின்றனர் என்றுதான் கூறினேன்” என்று சுரேந்திரன் பின் வாங்கியுள்ளார்.

                              **************

அமைச்சருக்குப் பதில் அமைச்சர் சகோதரர்...

பெரியவர்கள் வெளியூர் சென்று விட் டால், அந்த வீட்டில் உள்ள பிள்ளைகள் செய்முறை விழாக்களில் கலந்து கொள் வது வழக்கம். ஆனால், பீகார் மாநிலத்தில், கால்நடைத்துறை அமைச்சர் முகேஷ் சஹானிக்கு பதிலாக அவரது தம்பி, கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹாஜிப்பூர்’ என்ற இடத்தில் நடந்த இந்த அரசு விழாவிற்கு, அமைச்சரின் தம்பியை, அரசு காரிலும் அழைத்து வந்துள்ளனர். முகேஷ் சஹானி, பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியிலுள்ள விகாஷீல் இன்சான் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

                              **************

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ விவாதத்திற்கு எதிர்ப்பு..!

கர்நாடக சட்டப் பேரவையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான விவாதம் நடத்துவதற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டப் பேரவைக்கு உள்ளேயே தர்ணா நடத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த 2 நாட்களாக கர்நாடக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடங்கின. ஆத்திரம் அடைந்த எடியூரப்பா அரசு, காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஸ்வர் மீது7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

                              **************

ஆர்எஸ்எஸ்-ஸை குறை சொல்வதை நிறுத்துங்கள்!

காங்கிரசார் எதற் கெடுத்தாலும் ஆர்எஸ்எஸ்.மீது குறை சொல்கிறார்கள். தினமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறை சொல்வதே அவர் களின் தொழிலாக மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பே காரணம் என்றுகாங்கிரசார் சொல்கிறார்கள். சாதாரண பின்னணியில் இருந்து வந்த என் போன்றோர் முதல்வர் பதவியை அடையஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம்.மோடி பிரதமராகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பே காரணம் என்று கர்நாடகமுதல்வர் எடியூரப்பா கொந்தளித்துள் ளார்.

;