politics

img

ஓட்டுபோடாவிட்டால் அப்புறம் இருக்கு கச்சேரி ... வாக்காளர்களை மிரட்டும் மம்தா கட்சி அமைச்சர்கள்...

கொல்கத்தா:
முதல்வர் மம்தா பானர் ஜிக்கு வாக்களிக்காமல் யாராவது ஏமாற்றினால், தேர்தலுக்கு பிறகு அவர்கள் தகுந்தமுறையில் கவனிக்கப்படுவார்கள் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களை மிரட்டும்சம்பவங்கள் மேற்குவங்கத் தில் அரங்கேறி வருகின்றன.

கடந்த மார்ச் 4 அன்றுதினஜ்பூர் பொதுக்கூட்டத்தில்பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமிதுல் ரஹ் மான் என்பவர், “சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள், தேர்தலுக்கு பின்னர் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என மிரட்டினார்.“முதல்வர் மம்தா பானர்ஜிகொண்டு வந்த திட்டங்களால், கட்சி பாகுபாடின்றி அனைவரும் பயனடைந்திருக்கின்றனர். எனவே, யாராவது அவரை ஏமாற்றினால் துரோகிகளாக குறித்து வைக்கப்பட்டு, அவர்களை தேர்தலுக்கு பின்னர் ‘தகுந்த முறையில் கவனிப்போம்’ என பேசினார்.அவரைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக இருப்பவரும், சப்டாகிராம் தொகுதி வேட்பாளருமான தபன் தாஸ் குப்தாவும் வாக்காளர்களை மிரட்டியுள்ளார். ஹூக்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய தபன்தாஸ் குப்தா, “எனக்கு தேர்தலில் வாக்களிக்காவிட்டால் உங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்காது. அவ்வளவுதான் பார்த்துக் கொள்ளுங்கள்...” என்று கூறியுள்ளார்.

;