politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி தினந்தோறும் செலுத்தப்படும் விகிதம் ஜூன் மாதத்தின் கடைசி 10 நாட்களில் இருந்ததை விட ஜூலைமாதத்தின் முதல் 10 நாட்களில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜூலை 1 முதல் 10 வரை நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் டோஸ்கள் மட்டுமே தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், இந்த வேகம் நாளொன்றுக்கு 80.65 லட்சம் ஊசிகளாக அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த விபரங்கள், தடுப்பூசிசெலுத்துதலில் மிகப் பெரிய சுணக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. குறிப்பாக, ஒரே நாளில் 61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலைமை படிப்படியாக குறைந்து, ஜூலை 5 முதல் 10 வரையிலான நாட்களில் நாளொன்றுக்கு 37 லட்சம் டோஸ்கள் என்பதாக குறைந்துவிட்டது. இதுவரையிலும் இந்தியாவில் ஒட்டுமொத்த வயது வந்தவர்களில் வெறும் 7.8 சதவீதம் பேருக்குத்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும். உடனடியாக மோடி அரசு செயல்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

                                                     **********************  

2014 இல் மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் இதுவரை தனது கூட்டுக் களவாணிகளான கார்ப்பரேட் நண்பர் களுக்கு அளிக்கப்பட்ட கடன்களில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த தொகைரூ.6.11 லட்சம் கோடி ஆகும். 2014-15 ரூ.26,407 கோடியும், 2015-16 இல்ரூ.39,131 கோடியும், 2016-17 இல் ரூ.54,152 கோடியும், 2017-18 இல்ரூ.1,29,504 கோடியும், 2018 - 19 இல் ரூ.1,83,168 கோடியும், 2019-20 இல்ரூ.1,78,305 கோடியும் ஆக மொத்தம் ரூ.6.11 லட்சம் கோடி மக்கள் சொத்து, கார்ப்பரேட் கடன் தள்ளுபடி என்ற பெயரில் சூறையாடப்பட்டுள்ளது. இது நமது தேசத்தின் சொத்துக்கள் எந்த அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு சிறு உதாரணமே. மக்கள் பணத்தை கொள்ளையடித்த அந்தக்கூட்டுக் களவாணிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். அவற்றைகொண்டு மக்களின் நலன் காக்கும் நடவடிக்கைக்கு செலவிடுங்கள்.

                                                     **********************  

ஒன்றிய உள்துறை அமைச்சரின் பொறுப்பின் கீழ் கூட்டுறவுத் துறைஉருவாக்கப்பட்டிருப்பதன் இரட்டை சூழ்ச்சி என்ன என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஒன்று மாநிலங்களின் அலுவலான கூட்டுறவுத் துறையை ஒன்றிய அரசே தங்கள் வசப்படுத்தியிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல் ஆகும். கூட்டுறவு சங்கங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுஎன்பது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களுடனான நேரடித் தொடர்பை உறுதிப்படுத்தி கொள்வதாகும். இது தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகும். குறிப்பாக, பிராந்திய கட்சிகளை சிறுமைப்படுத்தி, அவற்றைபடிப்படியாக அழித்துவிட்டு தானே ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகும். மற்றொன்று, ஏற்கனவே, பொதுத்துறை வங்கிகளின்குவிந்துள்ள மக்களின் சேமிப்பு பணத்தை தனது கூட்டுக் களவாணிகளுக்கு கடன் என்ற பெயரில் வாரி வழங்கிவிட்டு அவற்றை வராக்கடன்களாக அறிவித்து தள்ளுபடி செய்துவிட்டது. அந்தக் கடன்கள் மீண்டும் வங்கிகளுக்கு திரும்பப்போவதில்லை. இதன் விளைவு நாட்டின் பொதுத்துறைவங்கிகள் பாலைவனமாக மாறிவிட்டன. இந்த நிலையில், பெரும் மூலதனமாக மக்களின் சிறுசேமிப்பு பணம் குவிந்துள்ள கூட்டுறவுத் துறையையும் சூறையாடுவதற்கும் அதன் மூலம் தனது கட்சிக்கு நிதியையும் அரசியல்ஆதாயத்தையும் உருவாக்கிக் கொள்வதற்கும்தான் கூட்டுறவுத் துறைஉருவாக்கப்பட்டு உள்துறை அமைச்சரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையை பொறுத்தவரை அதில் குவிந்துள்ள மக்களின் பணத்தைப் பற்றி அறிந்தாலே வியப்பாக இருக்கும். அதுவொரு இனிப்பான மணம் வீசும் மூலதனமாகும். மகாராஷ்டிராவில் 200 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் ஆண்டு வரவு - செலவு மட்டும் ரூ.35,000கோடி ஆகும். இதே மாநிலத்தில் 200 கூட்டுறவு பால் சங்கங்கள் உள்ளன. இவற்றின் ஆண்டு கணக்கு ரூ.40,000 கோடியாகும். இந்த மாநிலத்தில் 21 ஆயிரம் விவசாயக் கடன் சங்கங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 25,901 மாவட்ட மற்றும் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் தேசியகூட்டுறவு மேம்பாட்டு கழகத்தின் உதவித் தொகை மட்டும் ரூ.5,986 கோடி குவிந்துள்ளது. பீகாரில் 34 விதமான மாநில அளவிலான கூட்டு
றவு சங்கங்கள் உள்ளன. அவற்றில் 525 வியாபார் மண்டல்கள் எனப்படும்வணிக சங்கங்களின் வரவு - செலவு உள்ளது. ஆண்டு கணக்கு ரூ.30,000கோடிக்கும் அதிகம். இப்படி நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் கூட்டுறவுத் துறை இப்போது பாஜகவின் சூறையாடல்களுக்கு இலக்காகியுள்ளது.

;