politics

img

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்... அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமித்ஷா....

தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என நம்புவதாகக் கூறி அதிமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பாஜக தலைவர் அமித்ஷா.

தமிழக முதல்வராக இருந்த மறைந்தஜெயலலிதா பாஜக-வை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரது மறைவிற்குப் பின் பாஜக-வின் தொங்கு சதையாக அதிமுக மாறிவிட்டது. இருப்பினும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் அதிமுக பாஜக-விற்கு 20 தொகுதிகளை கொடுத்துள்ளது. தவிர கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் பாஜகவிற்கு தாரை வார்த்துவிட்டது அதிமுக. மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஹெச்.வசந்தகுமாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வருகை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கன் னியாகுமரி தொகுதியில் ஞாயிறன்று பிரச்சாரம் செய்தார்.அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், ‘’தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெல்லும் என்றும் கூறினார். பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றியை அமித்ஷா-வால் உறுதிப்படுத்தமுடியால் “ நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்” என சாமர்த்தியமாகக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சிஅமையும் என நம்புகிறேன்’’. என்று ஒருபோடு போட்டார். “முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக” தனிப் பெரும்பான்மை பெறாது என்பதை சூசகமாகக் குறிப்பிட்டார்.
 

;