politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உதவுவது எனும் பெயரில் ஏழை மக்களிடம் பகற்கொள்ளை 

மக்கள் நலத்திட்டங்களுக்குத்தான் பெட்ரோல் விலை உயர்வு எனவும் தடுப்பூசிகள் இலவசமாக தர வேண்டும் எனில் இந்த உயர்வு அவசியம் எனவும் மோடி அரசாங்க ஆதரவாளர்கள் பிதற்றிவருகின்றனர். ஏழை மக்களுக்கு உதவுவது எனும் பெயரில் ஏழை மக்களிடமே பகற்கொள்ளை. அற்புதம் பிரதமர் மோடி அவர்களே!

                                     ******************

ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையதள தொடர்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என ஒரு ஆண்டாக முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் மோடி அரசு உதாசீனம் செய்தது. 22 சதவீதபள்ளிகளுக்குத்தான், அதுவும் அரசு பள்ளிகளில் 12 சதவீதம்தான் இணைய தள தொடர்பு வசதி உள்ளது. குழந்தைகளின் கற்றல் வசதியை உதாசீனப்படுத்துவது நமது எதிர்காலத்தையே வீணாக்குவது என பொருள். கிரிமினல் குற்றம்.

                                     ******************

தடுப்பூசி செலுத்துவதன் தற்போதைய வேகத்தில் 15 பெரிய மாநிலங்களில்12ல் ஒரு சுற்று போடுவதற்கே 3 முதல் 9 மாதங்கள் ஆகும். 13 மாநிலங்களில் இரண்டு சுற்றும் போடுவதற்கு  6 முதல் 19 மாதங்கள் ஆகும். ஜூலை மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசு கூறுகிறது. அப்படியானால் ஒரு நாள் சராசரி 40 லட்சம். ஆனால் நமதுஇலக்கை அடைய ஒரு நாளைக்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தேவை. உலகமெங்கும் எங்கு கிடைத்தாலும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள். விரைவுபடுத்துங்கள்.

                                     ******************

பெட்ரோலியப் பொருட்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 730ல் 332 மாவட்டங்களில் லிட்டர் ரூ100-ஐ தாண்டிவிட்டது.மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமை!

;