politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் ரூ.7.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அப்படியிருந்தும் அவர்களின் செலவு 7.4 லட்சம் கோடி சரிந்துள்ளது என ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. கடன் வலையில் மக்கள்! தமது வாழ்நாள் சேமிப்பு முழுவதும் செலவு செய்த பின்னரும் அதிகமாக கடன் வாங்கியபின்னரும் அத்தியாவசிய வாழ்க்கை தேவைக்காக செலவு செய்ய மக்கள் கைகளில் பணம் இல்லை. மோடி ஆட்சியின் கீழ் உயிர் வாழ்வதற்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை பன்kடங்கு அதிகரித்துவிட்டது.

                                          ****************

2014ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசாங்கங்களுடன் பகிர்ந்தளிக்க மறுக்கும் வகையில் சுங்க வரிகள் பெட்ரோல் மீது 217% டீசல் மீது 607% உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 25 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த பெரும் தொகை எங்கே? எதற்காக எப்படி செலவு செய்யப்பட்டது? பொய்யான விளம்பரங்களுக்கும் பிம்பம் கட்டமைக்கவும் செலவு செய்யப்பட்டதா? இல்லை பதுக்கப்பட்டுள்ளதா? மோடி அரசு பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை மக்கள் முன்புவைக்க வேண்டும்.

                                          ****************

காலனியாதிக்கத்தில் விடுதலை போராட்டத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தேசத் துரோக சட்டம் ஏன் இன்னும்நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மிக கொடூரமான இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும். விக்டோரியா மகாராணியின் பெயரில் ஆட்சிநடத்திய பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இந்த கொடிய சட்டம் உருவாக்கப்பட்டது. இப்பொழுது மாற்று கருத்துகளையும் கருத்து சுதந்திரத்தையும் நசுக்க ஏவப்படுகிறது. நமது குடியரசின் ஜனநாயக மதச்சார்பற்ற அரசியல் சட்டத்திலிருந்து இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும்.

                                          ****************

டெலிகிராஃப்இதழ்:வாரணாசியின் அனைத்து வாசனை திரவியங்களை பயன்படுத்தினாலும் (யோகியின்) கைகள் சுத்தமாகாது!

கங்கையில் உடல்கள் மிதந்ததை “வரலாறு காணாத வேதனை” என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது. இரண்டாவதுஅலை தவறான முறையில் கையாளப்பட்ட கிரிமினல் குற்றம்! பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் வன்முறைகளில் இந்தியாவிலேயே உ.பி.தான் முதலிடம் என தேசிய குற்ற ஆய்வகம் குறிப்பிடுகிறது. ஆனால் பிரதமர் யோகியை புகழ்கிறார். வெட்கக்கேடு! நயவஞ்சகம்! தேர்தல் சூழ்ச்சி!

;