politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஒன்றிய நிதியமைச்சகம் மீண்டுமொரு முறை கொரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலை வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் மிக வேகமாக மீட்சி பெற துவங்கிவிட்டதாகவும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறது நரேந்திரமோடியின் பகட்டுப்பிரச்சாரத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. இவர்கள், பொருளாதாரம் மீட்சிப் பெறுகிறது என்று 2015 இல் சொன்னார்கள். 2016, 2017, 2018, 2019, 2020 என எல்லா ஆண்டுகளிலும் இடைவிடாமல் இதை கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையில் நிலைமை தலைகீழாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருளாதார நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியும். உண்மை
யில் மீட்சி பெற்றிருந்தால் அடுத்த ஆண்டு அதே பல்லவியை மீண்டும் பாடியிருக்கக் கூடாது அல்லவா? என்னே ஒரு பித்தலாட்டம்!

                                         ****************

இந்தியாவில் செப்டம்பருக்கு முன்பு 67 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இப்போது ஜூலை மாதம் ஆகிவிட்டது. இதுவரையிலும் 35 கோடி பேருக்குத்தான் தடுப்பூசிபோடப்பட்டிருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேருக்குத்தான் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் போட்டவர்கள் மொத்தமே 4.6 சதவீதம் பேர்தான். நிலைமை இப்படியிருக்க, செப்டம்பருக்கு முன்பு எங்கிருந்துஅத்தனை பேருக்கும் தடுப்பூசி போடுவீர்கள் பிரதமர் மோடி அவர்களே! இப்போதாவது உணருங்கள். அனைவருக்கும் மிக வேகமாக இலவச தடுப்பூசிபெரும் மக்கள் இயக்கமாக நடந்தாக வேண்டும் என்பதை. அதனால் தான்மீண்டும் மீண்டும் சொல்கிறோம். உலகில் எங்கெல்லாம் தடுப்பூசி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யுங்கள்.மாறாக, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

                                         ****************

எரிபொருள் விலைகள் கடந்த 6 நாட்களில் நான்காவது முறையாகஅதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டர்ஒன்றுக்கு 35 பைசா அதிகரித்துள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 26 பைசா அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மோடி அரசு நடத்துகிற கிரிமினல்தனமான தாக்குதல்களுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

                                         ****************

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையான சிறு, குறுதொழில்துறை கிட்டத்தட்ட படுகொலை செய்யப்பட்டுவிட்டது என்று சொசைட்டி ஜெனரல் எனும் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. விவசாயத் துறை அல்லாத சிறு, குறு தொழில்துறையில் மட்டும்11 கோடி மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே தங்களது வருமான வாய்ப்புகளை இந்த காலகட்டத்தில் இழந்திருக்கிறார்கள் என்று பெங்களூருவை மையமாக கொண்ட அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் குணால் குண்டு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நமது நாட்டின் சிறு, குறு தொழில் துறையை, முறைசாரா தொழிற்துறையை மோடி அரசு அமலாக்கிய மிகக் கொடூரமான பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் சிதைத்து அழித்துவிட்டது. இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு மிக மோசமான முறையில் கையாண்டதால் சிறு, குறு தொழில்கள் மேலும் சிதைந்தன. பிற நாடுகளில் - குறிப்பாக பணக்கார நாடுகளில் கூட சிறு, குறு தொழில்களைமீட்பதற்கு நேரடி பண மானியமாக அளித்திருக்கிறார்கள். மோடி அரசு அதை கவனிக்க வேண்டும்.ஒன்றிய நிதியமைச்சகம் மீண்டுமொரு முறை கொரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலை வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் மிக வேகமாக மீட்சி பெற துவங்கிவிட்டதாகவும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறது நரேந்திரமோடியின் பகட்டுப்பிரச்சாரத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. இவர்கள், பொருளாதாரம் மீட்சிப் பெறுகிறது என்று 2015 இல் சொன்னார்கள். 2016, 2017, 2018, 2019, 2020 என எல்லா ஆண்டுகளிலும் இடைவிடாமல் இதை கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையில் நிலைமை தலைகீழாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருளாதார நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியும். உண்மையில் மீட்சி பெற்றிருந்தால் அடுத்த ஆண்டு அதே பல்லவியை மீண்டும் பாடியிருக்கக் கூடாது அல்லவா? என்னே ஒரு பித்தலாட்டம்!

                                         ****************

இந்தியாவில் செப்டம்பருக்கு முன்பு 67 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இப்போது ஜூலை மாதம் ஆகிவிட்டது. இதுவரையிலும் 35 கோடி பேருக்குத்தான் தடுப்பூசிபோடப்பட்டிருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேருக்குத்தான் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் போட்டவர்கள் மொத்தமே 4.6 சதவீதம் பேர்தான். நிலைமை இப்படியிருக்க, செப்டம்பருக்கு முன்பு எங்கிருந்துஅத்தனை பேருக்கும் தடுப்பூசி போடுவீர்கள் பிரதமர் மோடி அவர்களே! இப்போதாவது உணருங்கள். அனைவருக்கும் மிக வேகமாக இலவச தடுப்பூசிபெரும் மக்கள் இயக்கமாக நடந்தாக வேண்டும் என்பதை. அதனால் தான்மீண்டும் மீண்டும் சொல்கிறோம். உலகில் எங்கெல்லாம் தடுப்பூசி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யுங்கள்.மாறாக, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

                                         ****************

எரிபொருள் விலைகள் கடந்த 6 நாட்களில் நான்காவது முறையாகஅதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டர்ஒன்றுக்கு 35 பைசா அதிகரித்துள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 26 பைசா அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மோடி அரசு நடத்துகிற கிரிமினல்தனமான தாக்குதல்களுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

                                         ****************

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையான சிறு, குறுதொழில்துறை கிட்டத்தட்ட படுகொலை செய்யப்பட்டுவிட்டது என்று சொசைட்டி ஜெனரல் எனும் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. விவசாயத் துறை அல்லாத சிறு, குறு தொழில்துறையில் மட்டும்11 கோடி மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே தங்களது வருமான வாய்ப்புகளை இந்த காலகட்டத்தில் இழந்திருக்கிறார்கள் என்று பெங்களூருவை மையமாக கொண்ட அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் குணால் குண்டு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நமது நாட்டின் சிறு, குறு தொழில் துறையை, முறைசாரா தொழிற்துறையை மோடி அரசு அமலாக்கிய மிகக் கொடூரமான பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் சிதைத்து அழித்துவிட்டது. இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு மிக மோசமான முறையில் கையாண்டதால் சிறு, குறு தொழில்கள் மேலும் சிதைந்தன. பிற நாடுகளில் - குறிப்பாக பணக்கார நாடுகளில் கூட சிறு, குறு தொழில்களைமீட்பதற்கு நேரடி பண மானியமாக அளித்திருக்கிறார்கள். மோடி அரசு அதை கவனிக்க வேண்டும்.

;