politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஜனாதிபதி உரையை புறக்கணித்தது நியாயமானது 

பரவலான விவாதங்களுக்கு பின்னர்தான் 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன என்று ஜனாதிபதி உரை குறிப்பிடுகிறது. இத்தகைய மிக மிகத் தவறான தகவல்களை முன் வைப்பது என்பது எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தது நியாயமானது என்பதை நிலைநாட்டுகிறது. இந்த “முக்கியமான வேளாண் சட்டங்கள்” பெரும் குழப்பத்துக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. சட்டவரைவு தேர்வு குழுவுக்கு அனுப்பப்படவில்லை/ விவாதங்கள் அனுமதிக்கப்படவில்லை/ வாக்கெடுப்பு மறுக்கப்பட்டது/வாக்கெடுப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அதீத அவசரம் பெரும் தொற்றுதலைவிரித்து ஆடியபோது!

ஜனாதிபதியை பொய்யுரை படிக்க வைத்த மோடி அரசு
மேதகு ஜனாதிபதி அவர்கள் மத்திய அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையை ஆண்டின் முதல் கூட்டுநாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுதான் வழக்கம். இந்தியாவின் ஜனாதிபதியை பொய்யுரை படிக்க வைத்ததன் மூலம்அந்த மிகப்பெரிய பதவியின் கண்ணியம் சிதைக்கப்பட்டுள் ளது. நமது அரசியல் சட்டம் உருவாக்கிய அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சிதைக்கப்படுகின்றன. அரசியல் சட்டத்தை சிதைப்பதன் மூலம் குடியரசு எனும் நமது தேசத்தின் முகத்தோற்றமே மாற்றப்படுகிறது. இது அனுமதிக்கப்படக்கூடாது.

சுய பாராட்டுப் பத்திரம் 
கத்தை கத்தையாக பக்கங்களைக் கொண்ட பொருளாதார ஆய்வறிக்கை தேசத்தின் பொருளாதார நிலைமை குறித்தும் அதனை எப்படி மீட்பது எனும் திசைவழியை மக்களுக்கு சொல்வதற்கும் மாறாக பொய்யான காரணிகள் அடிப்படையில் சுய பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொள்வதாக உள்ளது.

வெற்று முழக்க ஆவணம் 
தேசத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய மந்த நிலையை அடைந்துள்ளது என்னும் உண்மை பொருளாதார ஆய்வறிக்கையில் அங்கீகரிக்கப்படவில்லை. பெரும் தொற்று காரணமாக “சிறிய பின்னடைவு” மட்டுமே ஏற்பட்டுள்ளது என அறிக்கை கூறிக்கொள்கிறது. இந்த ஆய்வறிக்கை மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த அரசாங்கத்தின் கொள்கைகளை திரை போட்டு மறைக்கும் பொய்ப்பிரச்சாரமும் வெற்று முழக்கங்களும் அடங்கிய ஒரு ஆவணமாகவே உள்ளது. 

பொருளாதாரத்தை அழித்த அரசின் தான்தோன்றித்தனம்
பல வலுவான பொருளாதார ஆய்வு உண்மைகள் மக்களுக்கு எடுத்துரைக்கும் செய்தி என்னவென்றால், பெரும் தொற்றுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது என்பதுதான். இந்த வீழ்ச்சிக்கு பணமதிப்பு நீக்கமும் ஜி. எஸ். டி. அமலாக்கமும் காரணம். இந்த இரட்டை காரணங்கள் போதாதென்று தான்தோன்றித்தனமான திட்டமிடப்படாத ஊரடங்கும் பொருளாதாரத்தை அழித்தது.

பணக்காரர்களே பயன் அடைவர்
பொருளாதார ஆய்வறிக்கை V வடிவத்திலான மீட்சி இருக்கும் என கூறுகிறது. அதாவது பொருளாதாரம் சரிந்த வேகத்திலேயே நிமிர்ந்து நிற்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் மீட்சி என்பது K வடிவத்தில்தான் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறுவர் என்று இதற்குப் பொருள். 2025-ஆம் ஆண்டுதான் நமது பொருளாதாரம் பெருந்தொற்றுக்கு முந்தைய பழைய நிலையை எட்டும் என ஐ. எம். எஃப் .கூறுகிறது.

சீர்திருத்தங்களே கார்ப்பரேட் லாபத்திற்காகத்தான்
வேளாண் சட்டங்கள்/புதிய தொழிலாளர் சட்ட கொள்கைகள்/குறு சிறு தொழில்களுக்கு தரப்பட்ட திட்டங்கள் ஆகியவை பொருளாதாரம் பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்ட சீர்திருத்தங்கள் என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. வேளாண் சட்டங்களை அகற்ற வேண்டுமென ஒரு உக்கிரமான போராட்டத்தில் விவசாயிகள் உள்ளனர். தொழிலாளர்கள் தேசம் தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிறு குறு தொழில்கள் தாங்கள் அழிந்து கொண்டு இருக்கிறோம் என புகார் கூறுகின்றன. சீர்திருத்தங்கள் என்பது கார்ப்பரேட் லாபத்திற்காகத்தானே தவிர மக்களுக்காக அல்ல!

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

 

;