politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பிரதம மந்திரியின் படாடோபமான வெற்று ஆரவாரங்கள் ஒவ்வொன்றும்,ஒவ்வொரு நாளும் அப்பட்டமாக அம்பலமாகி வருகின்றன. பெரிய சாதனைகள் படைத்துவிட்டதாக கூறுகிற அவரது அறிவிப்புகளையெல்லாம் தொடர்ந்து ஏற்படுகிற பேரழிவுகள் ஏராளமான உயிர்களை பறித்து, அவரதுபேச்சுக்கள் ஒவ்வொன்றும் எத்தனை பொய்யானவை என்றும் வெட்டவெளிச்சமாக்கி வருகின்றன. உத்தர்கண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் உடைந்து மிகப்பெரிய பனிச்சரிவுகள் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோரின்உயிர்கள் பறிபோய் உள்ளன. இதன் பின்னணியில் காலநிலை மாற்றம் தொடர்பான தாக்கங்கள் இருப்பதாக விபரங்கள் வந்த வண்ணம் உள்ளன.இமயமலையின் இந்து குஷ் மலை தொடரில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பனிப் பாறைகள் வெடித்து உடைவதுஎன்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் இதற்கான காரணம் காலநிலை மாற்றம்தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பல்வேறு உத்திகளை அமலாக்குவது ஒருபுறம்; முன்னதாக முன்னறிவிப்பு செய்து மக்களை பாதுகாப்பதற்கான உத்திகளை அமலாக்குவது முன்னுரிமை அம்சமாக இருக்க வேண்டும்.

                                  *****************

இந்து குஷ் மலைத் தொடரில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைஉடைந்து நேர்ந்துள்ள சம்பவம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை சூழலை பொருத்தமான முறையில் கையாளவேண்டும் என்ற படிப்பினையை நமக்கு அளிக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள கனடாவை மையமாககொண்ட ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல், நீர் மற்றும் சுகாதார ஆய்வு அமைப்பின் அறிக்கையின் படி, உலகம் முழுவதும் 58,700 பெரிய அணைக்கட்டுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக தெரிகிறது. இந்த அணைகள் 1930 - 1970க்கு இடைப் பட்ட காலத்தில் 50 முதல் 100 ஆண்டுகள் வரையிலான ஆயுட்கால வரையறையோடு கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 1000க்கும் மேற்பட்ட மிகப் பெரிய அணைகள் இந்தியாவில் உள்ளன; 2025 ஆம் ஆண்டு வாக்கில் இந்த அணைகளின் ஆயுட்காலம் 50 ஆண்டுகளை தாண்டிவிடும். எனவே அவ்வப்போது ஏற்படுகிற மிகப் பெரிய, தாங்க முடியாத பேரிடர்களை கருத்தில் கொண்டு அரசு நிர்வாகங்கள் இந்தியா
வின் அணைகளையும், அவற்றின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

                                  *****************

“ஜெய்ஹிந்த்” என்று கூறிக் கொண்டே நவீன இந்தியாவின் அனைத்துமுன்னேற்றங்களையும் அழித்து வருகிறது மத்திய அரசு. எப்டிஐ (அந்நியநேரடி முதலீடு) என்ற - ‘அந்நிய பேரழிவு சித்தாந்தத்தை அமலாக்கி வருகிறது.உண்மையில் ஜெய்ஹிந்த் என்பது நவீன இந்தியாவுக்கான இயக்கம் உருவாக்கிய முழக்கமாகும். ஆனால் இன்றைக்கு அரசு தனது தோல்விகளை மறைத்து கொள்வதற்காக அந்த முழக்கத்தை கையாள்கிறது. இந்தியதேசம் அதை ஏற்றுக் கொள்ளாது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;