politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நீரஜ் சோப்ரா, ஒரு விவசாயியின் மகன். ஹாக்கி நீரஜ் ஹாக்கி வீரர்களான தில்ப்ரீத், குர்ஜன்த், ஹர்தீக் ஆகிய மூவரும் நமது விவசாயிகளின் மகன்கள்தான். பஜ்ரங் புனியாவும் ஒரு விவசாயி மகன்தான். இவர்கள் பெற்ற பதக்கங்களை கொண்டாடுகிற நாம், அதேவேளையில், அந்த விவசாயிகளின் வேதனைகளை மறந்துவிடக்கூடாது; அந்த விவசாயிகள்தான் தில்லியின் எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதாநாயகர்களின் முயற்சிகளும் வெற்றிகளும் அவர்களுக்கு முறையான, போதுமான வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில்தான்,  சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி மோடி அரசு வெட்கப்பட வேண்டும். உடனடியாக கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நமது அன்ன தாதாக்கள் தங்களது விளை பொருட்களை குறைந்தபட்ச ஆதாரவிலையில் விற்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதி செய்திட வேண்டும். 

                            ***************  

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையை அவரவர் வங்கிக் கணக்குகளில் 2020 ஜுன் மாதம் முதல் மோடி அரசு செலுத்தவில்லை; அதுமட்டுமல்ல, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (பிஎம்யுஒய்) திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்ட 8 கோடிப் பேரில் நடப்பு நிதியாண்டில் 3.2 கோடிப் பேருக்கு இன்னும் அடுத்த சிலிண்டர் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகியுள்ளன.மேலும், ஒன்றிய பட்ஜெட்டில் சமையல் எரிவாயுக்கு ஒதுக்கப்படும் மானியத் தொகை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்திருக்கிறது. 2011-12 ஆம் நிதியாண்டில் எரிவாயு மானியம் ரூ.68,484 கோடியாக இருந்தது. 2012-13, 2013-14 ஆகிய நிதி ஆண்டுகளில் முறையே ரூ.96,880கோடி; ரூ.85,378 கோடி என அதிகரிக்கப்பட்டது.

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இது, 2014-15 ஆம் நிதியாண்டில் ரூ.60,269 கோடியாக குறைக்கப்பட்டு, அதற்கு அடுத்த நிதியாண்டிலேயே ரூ.29,999 கோடியாக மிகக்கடுமையாக குறைக்கப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்பட்டே வந்திருக்கிறது.ஆனால் மோடியின் படாடோபமான வெற்று வாய்ச்சவடால் விளம்பரத்திற்காக கோடி கோடியாக செலவழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பிஎம்யுஒய்) 
திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாக பெரிய பெரிய போர்டுகளும், பத்திரிகைகளில் பெரிய அளவில் பல வண்ண விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. உண்மையில் மானியங்களை கணிசமாக பறித்துக் கொண்ட மோடி இப்போது ஏழைகளின் வயிறை எரியச் செய்கிற ஒரு குற்றவாளியாக நிற்கிறார். 

                            ***************  

நாட்டில் உள்ள 742 மாவட்டங்களில் இப்போது வரை 306 மாவட்டங்களில் மட்டும்தான் அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ கோவிட் பரிசோதனை செய்யப்படுகிற ஆர்டிபிசிஆர் சோதனைக்கான ஆய்வகங்கள் உள்ளன. 342 மாவட்டங்களில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. பிறகு எப்படி நாம் மூன்றாவது அலை பேரழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்? மோடி அரசு உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைக்கான வசதிகளை துரிதகதியில் செய்திட வேண்டும். 

                            ***************  

கடந்த 6 வார காலத்துடன் ஒப்பிடும் போது நடப்பு வாரத்தில்நாட்டின் வேலையின்மை விகிதம் மிக அதிகபட்ச மாக 8.1சதவீதத்தை எட்டியுள்ளது. ஜுன் 27 உடன் முடிவடைந்த வாரத்திற்குப் பிறகு 7.3 சதவீதமாக இருந்து படிப்படியாக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான ஊர டங்கு உத்தரவுகள் மற்றும் பெருமளவிற்கு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரமானது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறுகிறது என்று பொருளாதார கண்காணிப்பு ஆய்வு மையம் கூறுகிறது. இதன்விளைவாக மக்களின் துயரங்கள் மேலும் மேலும்அழுத்துகின்றன. சம்பள வெட்டு, வேறு புதியவருமானமின்மை போன்றவை மக்களை இன்னும்கொடும் துயரத்திற்குள் தள்ளிக்கொண்டிருக் கிறது. ஒவ்வொரு குடும்பத்தின் கடன் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. பொருளாதார மந்த நிலை மேலும் ஆழமடைந்து கொண்டிருக்கின்றது. இந்த சூழலில், மோடியின் படாடோப விளம்பரங்களால் எந்த மீட்சியும் இருக்கப்போவ தில்லை. மக்களின் கரங்களில் நேரடியாக பணத்தை அளிப்பதே ஓரளவுக்கு அவர்களை பாதுகாக்கும்.

;