politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி பிரச்சாரத்தின் மோசடியும் வாய்ப்பந்தலும் மீண்டும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.“ஸ்வச் பாரத்” எனும் தூய்மை இயக்கம் மூலம் 100% வீடுகளுக்கு கழிப்பறை வசதி உருவாக்கப்பட்டது என வாய்ப்பந்தல் போட்டனர். ஆனால் தற்பொழுது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் ஐந்தாவது சுற்று கிராமப்புற மக்களிடையே மூன்றில் ஒரு பகுதியினருக்கு கழிப்பறை வசதி இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இதே தகவலைதான் 2018ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வுகளும் உறுதி செய்தன. இவர்களின் பொய்களுக்கு அளவே இல்லை!

                                   *****************

மத்திய பிரதேசத்தில் பணிக்கு செல்லும் பெண்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இது அவர்களது பாதுகாப்புக்காக என 
அரசாங்கம் கூறியுள்ளது. பெண்களின் அடிப்படை உரிமைகள் மீது மிகப்பெரிய தாக்குதல்! மத்திய பிரதேசத்தில்தான் தேசத்திலேயே அதிகமாக ஒரு நாளைக்கு 15 பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன. பெண்களை உளவு பார்ப்பதற்கு பதிலாக பா.ஜ.க. முதல்வர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த  வேண்டும்.  குடும்ப ஆணாதிக்கத்தின்பெயரில் பெண்களை மேலும் அடிமைத்தனத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.

                                   *****************

பங்கு சந்தை குறியீடு வளர்ச்சியை பார்த்துவிட்டு சிக்கல்கள் தீர்ந்துவிட்டன என சிலர் நினைக்கின்றனர். ஆனால்  சிக்கல்கள் இப்போதுதான் தொடங்குகின்றன என்பது எனது மதிப்பீடு என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மக்களின் துன்பங்கள் அதிகரித்த  இந்தக் காலகட்டத்தில் பெரும் பணம் படைத்தவர்கள்சூப்பர் லாபத்தை கொள்ளையடித்துள்ளனர். பங்குசந்தையில் ஊக வணிகசூதாட்டம் நடத்துகின்றனர். பொருளாதார குமிழிகளை உருவாக்கு கின்றனர். இந்த குமிழிகள் எல்லையில்லாமல் விரிவடைவது கிடையாது. இந்த குமிழிகள் வெடிக்கும் பொழுது பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் சிதைகின்றன.

                                   *****************

கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை முழுமையாக ஆய்வுசெய்யாமலேயே அதனை பயன்படுத்த அரசாங்கம் முனைகிறது. பல அறிவியல் துறை நிபுணர்கள் முன்வைத்த நியாயமான கருத்துக்களை அரசாங்கம் ஏற்க மறுக்கிறது என்பது ஆபத்தானது; அதிர்ச்சி அளிக்கிறது. கோவாக்சின் தடுப்பூசி குறித்து நம்பிக்கையை உருவாக்குங்கள்; அதற்குப் பிறகு பயன்படுத்துங்கள்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;