politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை மதிப்பீட்டில் மோசடி/ புல்வாமா மற்றும் பாலக்கோடு தாக்குதல்கள் குறித்து ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது என்பதை அம்பலப்படுத்தும் மும்பை காவல்துறையின் குற்றப்பத்திரிக்கை மிகக் கவலை தரும் கேள்விகளை எழுப்புகிறது. மோடி அரசாங்கம் பதில் தர நிர்பந்திக்கப்பட வேண்டும்.

                                             ************* 

தீரத்துடன் உறுதியாக போராடும் விவசாயிகளை மத்திய அமைச்சர்கள் இழிவுபடுத்துகின்றனர். தேசதுரோக பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று கூறி தேசிய புலன் விசாரணை முகமை துன்புறுத்துகிறது. ஆனால் அர்னாப் கோஸ்வாமி வாட்சப்பில் பேசியதாக அம்பலமாகியுள்ள தேசிய பாதுகாப்பு பற்றிய மிக ஆபத்தான செய்திகள் குறித்து அரசாங்கம் ஆழ்ந்த அமைதி காக்கிறது. ஏன்? கூட்டுச் சதியா?

                                          ************* 

ஏப்ரல் நவம்பர் மாதங்களில் 2019ம் ஆண்டைவிட 2020ல் கலால் வரி கூடுதல் வசூல். இத்தனைக்கும் சென்ற ஆண்டைவிட டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை இந்த ஆண்டு குறைவு. இது எப்படி சாத்தியம்? மோடி தனது கூட்டுக் களவாணிகளுக்கு கடன் தருவதன் மூலம் மக்களின் வங்கி சேமிப்பு கணக்குகளை கொள்ளையடிக்க அனுமதிக்கிறார். பிறகு லட்சக்கணக்கான கோடிகளில் உள்ள அந்தக் கடன்களை தள்ளுபடி செய்கிறார். வங்கிகளும் பொருளாதாரமும் தள்ளாடுகின்றன. மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்துகின்றனர். பொருளாதாரம் கொள்ளையடிக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

 

;