politics

img

கொரோனா நெருக்கடியிலும் பாஜக அதிகார வெறிபிடித்து அலைகிறது... மகாராஷ்டிரா முதல்வர் கடும் சாடல்...

மும்பை:
கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜ.க ஆட்சி வெறி பிடித்து அலைகிறது என்று மகாராஷ்டிரா  முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. மகாராஷ்டிர மாநிலம் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதில் மத்தியமோடி அரசு மிகவும் மெத்தனமாகவும் பாஜக ஆட்சி செய்யாதமாநிலங்களுக்கு பாரபட்சமாகவும் செயல்பட்டு வந்தது என்று அரசியல் கட்சியினரும் மக்களும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மகாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் கடுமையான பாதிப்பைச் சந்தித்து தற்போது மீண்டு வருகிறது.கொரோனாவில் இருந்து மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதே அரசின்முக்கியமான பணி. எனவே இவர்களைக் காப்பாற்று வதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்.ஆனால், இந்த நெருக்கடியான காலத்திலும் கூட சில கட்சிகள் பா.ஜ.கவை அரியணை ஏறவைக்க முயல்கிறார்கள். எப்படியாவது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டிவருகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறப்போவதில்லை. மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகார வெறிபிடித்து அலைவது, சட்டம் - ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும்.முதல்வராக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்தது இல்லை. எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதல்வராக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;