politics

img

லோக் ஜனசக்தியை அணைத்து அழித்த பாஜக... சிராக் பஸ்வானை விட்டு ஜேடியுவுக்கு ஓடும் எம்.பி.க்கள்....

பாட்னா:
சிராக் பஸ்வானுக்கு ஒன்றிய அரசில் பாஜக அமைச்சர் பதவி வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், பஸ்வான் கட்சி எம்.பி.க்கள் 6 பேரில், 5 பேரை தன்பக்கம் இழுத்து, கடந்த சட்டமன்றத்தேர்தலில் கிடைத்த தோல்விக்குஜேடியு பழிவாங்கியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவின் ‘பி’ டீமாகசிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி செயல்பட்டது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்று திட்டம் போட்ட பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை, ஜேடியுவுக்குஎதிராக தனித்துப் போட்டியிட வைத்தது. பாஜக போட்டியிடும் இடங்களை தவிர்த்து, ஜேடியு போட்டியிடும் இடங்களில் மட்டுமே சிராக் பஸ்வான் வேட்பாளர்களை நிறுத்தினார்.

இதன்காரணமாக, பீகாரில் ஜேடியுவைவிட பாஜக அதிக இடங்களில் வென்றது. தேர்தல் முடிவுகள்வெளியான பின்னால் பகிரங்கமாகவே இதுபற்றி ஜேடியு தலைவர்கள்குற்றம் சாட்டினர். எனினும், பதவிக்காக, அதே பாஜகவோடு கூட் டணி சேர்ந்து ஜேடியு தற்போது முதல்வர் பதவியை அனுபவித்து வருகிறது.அதேநேரம் பீகாரில் தாங்கள்பாஜகவை விடவும் சிறிய கட்சிஆவதற்கு காரணமான சிராக் பஸ் வானை பழிவாங்க முடிவுசெய்த ஜேடியு, சமீபகாலமாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர்கள் பலரையும்தனது கட்சிக்கு இழுத்து வருகிறது.அந்த வகையில்தான், விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஒன்றிய அமைச்சரவையில் சிராக்பஸ்வானுக்கும் பாஜக இடம் வழங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் 6 எம்.பி.க்களில் 5 பேரை தன்பக்கம் ஜேடியு இழுத்துள்ளது.

பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ்ராஜ் சிராக், சந்தன் சிங், வீணாதேவி, மெஹ்மூப் அலி கைசர்ஆகிய- அந்த 5 எம்.பி.க்களும்லோக் ஜனசக்தி கட்சியில், தங்களை தனி அணியாக அங்கீகரிக்கக் கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இது பீகார்அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிராக் பஸ்வானின் இந்த வீழ்ச்சிக்கு ஜேடியு-தான் நேரடிக் காரணம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் பாஜக-தான் பஸ்வானின் கட்சியை அணைத்தே அழித்து விட்டது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பஸ்வான் மேற் கொண்ட சமரச முயற்சியில், பசுபதி குமார் மட்டும் லோக் ஜனசக்தி கட்சியிலேயே தொடர்வதாக தெரிவித் துள்ளார்.

;