politics

img

ராகுலை விமர்சித்து பாஜக-வுக்கு காவடி....

இந்தியக் குடியரசு (அத்வாலே பிரிவு) கட்சியின்தலைவரான ராம்தாஸ் அத்வாலே, பாஜக கொடுத்த மத்திய அமைச்சர் பதவிக்காக அந்தக் கட்சியின் முகவராகவே மாறிவிட்டார். தனது கட்சியை மறந்து விட்டு, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்களை பலரையும் பாஜகவில் சேருங்கள் என்றுதொல்லை கொடுத்து வருகிறார். இந்நிலையில், பாஜக-வை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுலை வம்புக்கு இழுத்துள்ளார். காதல், கலப்புத் திருமணங்கள் ராகுலின் குடும்பத்திற்கு புதிது அல்ல. எனினும், “ராகுல் சாதிமறுப்புத் திருமணம் செய்தால், அவருக்கு மோடி அரசு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி வழங்கும்” என்று மலிவான அரசியலில் இறங்கியுள்ளார்.

;