politics

img

மாட்டுச் சாணத்தில் குளிப்பதும் கோமியம் குடிப்பதும்தான் வளர்ச்சியா? உலக நாடுகள் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கும்? மோடி அரசுக்கு சசிதரூர் கேள்வி....

திருவனந்தபுரம்:
கொரோனா தொற்றின் 2ஆவது அலை, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் மோடி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற் கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே, அறிவியல் பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல், மாட்டுச் சாணத்தில் குளித்தால் கொரோனா குணமாகி விடும், மாட்டின் சிறுநீரை(கோமியம்) குடித்தால் கொரோனா வராது என்றெல்லாம் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்மக்களைத் தவறாக வழிநடத்தி வருகின்றனர். பாஜக ஆளும் குஜராத்தில் மாட்டுத் தொழுவத்திலேயே மருத்துவ சிகிச்சைமையம் திறக்கப்பட்டு, கோமியம், சாணக்குளியலுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.மாட்டுச் சாணம் மற்றும் அதன் சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாது; மாறாக, சாணம் மற்றும் கோமியத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதால், அது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே வாய்ப்பு உள்ளதுஎன்று இந்திய மருத்துவ சங்கம்விளக்கம் அளித்தும், பாஜகவினர் அதைக் கண்டுகொள்வதாக இல்லை.

இந்நிலையில் பாஜகவினரின் இந்த செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனதுடுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘நமது (இந்தியாவின்) பிம்பம் குறித்து பாஜக மிகவும் கவலை கொண்டுள்ளதால் சொல்கிறேன்... பல தலைமுறைகளாக இந்தியாவைப் பாம்புபிடிப்பவர்களும் மந்திரவாதிகளும் இருக்கும் நாடாகவே உலகம் பார்த்தது... கடந்த 25 ஆண்டுகளில்தான் மருத்துவர்கள் மற்றும் கணினி வல்லுநர்களின் வீடாக இந்தியா மாறியது..! ஆனால், தற்போதைய செயல் பாடுகள், மீண்டும் இந்தியர்கள் என்றாலே கோமியம் குடிப்பவர்கள், மாட்டுச் சாணத்தில் குளிப்பவர்கள் என்ற கண்ணோட்டத் தைத்தான் ஏற்படுத்துகிறது. இதுதான் வளர்ச்சியா?’ என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கேட்டுள்ளார்.

;