politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கடந்த 5 ஆண்டுகளில் மலக்குழிக்குள் சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கூறுகிறது. ஆனால் பட்ஜெட் விவாதத்தின் பொழுது 340 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் யோகியின் ஆட்சி நடக்கும் உ.பி.யில் மட்டும் 52 பேர் எனவும் இதே அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கூறியது.இப்படி அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு அரசாங்கத்தை இந்திய தேசம் கண்டதே கிடையாது. என்ன பொய் சொன்னாலும் நமக்கு எவ்வித தண்டனையும் இல்லை எனும் இறுமாப்புதான் இப்படிப்பட்ட பொய்களை சொல்ல வைக்கிறது.மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்குவதற்காக உள்ள தடையை உடனடியாக நிறைவேற்றுங்கள்.

                                            ***********

மக்கள் பிரச்சனைகளில் அரசியல் போராட்டம் மேற்கு வங்கத்தில் தீவிரமடைகிறது. அங்கு இடதுமுன்னணி அரசாங்கத்தால், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நில உரிமை தரப்பட்டது. 2011ஆம் ஆண்டிலிருந்து திரிணாமுல் ஆட்சியில் இந்த நிலங்கள் விவசாயிகளிடமிருந்து காவல்துறைஅடக்குமுறை மூலமும் பயங்கரத்தை அவிழ்த்துவிட்டதன் மூலமும் நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டன. இப்பொழுது இந்த நிலங்களை மீட்டெடுக்க போராட்டங்கள் துவங்கியுள்ளன.

                                            ***********

பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவுபார்த்தது என்பது “ஒரு பிரச்சனையே இல்லை” என்கிறது மோடி அரசாங்கம். நாடாளுமன்ற அலுவல் அமைச்சர் பெகாசஸ் உளவு “முக்கியப் பிரச்சனை அல்ல” என கூறுகிறார். மோடி அரசாங்கத்துக்கு மக்கள் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு/வேலையின்மை/வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுதல்/கோவிட்தொற்று சுகாதாரம் என எதுவுமே “பிரச்சனைகளாக” தெரியவில்லை.மோடி அரசின் இந்த அணுகுமுறைதான் நாடாளுமன்றம் முடங்குவதற்கு காரணம்!

                                            ***********

பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த கணக்கில் காட்டப்படாத உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் மத்திய சுகாதாரத்துறை இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன!இந்த அரசாங்கம் பொய்கள் மற்றும் ஏமாற்றுவதன் அடிப்படையில்தான் இயங்குகிறது. பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த கணக்கில் காட்டப்படாத கூடுதல் உயிரிழப்புகள் குறித்து தரவுகள் காணவில்லை. சர்வதேச ஆய்வாளர்கள் இந்த விவரங்கள் அடிப்படையில்தான் உண்மையான உயிரிழப்புகள் 7 முதல் 8 மடங்கு கூடுதல் என கணக்கிட்டனர். சுய ஏமாற்று என்பது சுய தோல்விக்குச் சமம்!

                                            ***********

இந்த பெருந்தொற்று காலத்தில் கூட ஏழை மக்களுக்கு விரோதமாக/பணக்காரர்களுக்கு ஆதரவாக/மாநில அரசாங்கங்களுக்கு எதிராக  மோடி அரசாங்கம் செயல்படுகிறது என்பதை நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன:

$ கார்ப்பரேட் வரிகள் ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.5 லட்சம்     கோடியாக சரிவு- ஒரு லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை!

$ வரிகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருமானம்- முக்கியமாக     பெருந்தொற்று காலத்தில் பெட்ரோல் விலை உயர்வு மூலம்!

$ மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய வரி வருவாய் ஒரு லட்சம்     கோடி ரூபாய் சரிவு! எனினும் மாநிலங்கள் மீது மோடி அரசு பழி போடுகிறது.

                                            ***********

இந்தியாவில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் 30 ஆண்டுகள்!

பொருளாதாரம் கொடூரமாக வீழ்ச்சி!

கார்ப்பரேட்டுகள் சொத்துக் குவிப்பு!

தேசிய வளங்களும் மக்களின் சொத்தும் பகற்கொள்ளை!

மக்கள் துன்பக்கடலில்!

கொள்ளை அடிக்கப்பட்ட நிதி எங்கே சென்றது? கொள்ளை அடிக்கப்பட்ட மக்கள் பணத்தை மக்களுக்கே தாருங்கள். நமது பொருளாதாரத்தை சீரமைக்க பொது முதலீடுகளை அதிகரியுங்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழியுங்கள்!

                                            ***********

தடுப்பூசி இலக்கில் ஜூலை மாதம் மோடி அரசு 2 கோடி டோஸ்கள் பற்றாக்குறையில் தேசத்தைச் சிக்க வைத்துள்ளது. என்ன செய்துகொண்டுள்ளது மோடி அரசாங்கம்? மூன்றாவது அலையின் கோரத்தாண்டவத்தை விருந்தாளியாக அழைக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசாங்கம் ஜூலைக்குள் 51.6 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு தருவோம் என உறுதி அளித்தது. ஆனால் ஆகஸ்டு 2ம் தேதி வரை 49.7 கோடிதான் தந்துள்ளது. உடனடியாக உலகம் முழுதும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள்; தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துங்கள்.

;