politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி ஸ்டைல் கூட்டுறவு கூட்டாட்சி இதுதான். இரண்டாண்டுகளுக்கு முன்பு ரூ.4லட்சம் கோடியாக இருந்த ஒன்றிய  அரசின்வரி வருவாய் தற்போது ரூ.5.3லட்சம் கோடியாகஅதிகரித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் மாநிலங்களின் வரி வருவாய் 8சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளது. மத்திய வரி வருவாய் இனங்களிலிருந்து மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு 23சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏடு நடத்திய ஓர் ஆய்வில் இதுதொடர்பான விபரங்கள் தெரிய வந்துள்ளன. மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய்களும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்குத்தொகையும் கணிசமாக குறைந்திருப்பதால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கக்கூடிய முதல் மாநிலம் கேரளா. தொழில் வளர்ச்சி உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் தங்களது வரி வருவாயில் 10 சதவீதத்தை இழந்துள்ளன. மாநிலங்கள் இழந்திருப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு தராத தொகை உள்ளிட்ட வருவாயை ஒன்றிய அரசு இந்தக் காலக்கட்டத்தில் பொது செலவினத்திற்கு பெருமளவில் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது; மூலதனச் செலவாகவும் கணிசமானத் தொகையை மாற்றவில்லை. எனவே மாநிலங்கள் மீது, கூட்டாட்சி மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

                                          *****************

பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான் தான் எனப்படும் பிரதம மந்திரி முறைசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படுவது பெரும் வீழ்ச்சியை சந்தித்துஉள்ளது. கடந்த நான்கு மாத காலமாக மாதம்ஒன்றுக்கு வெறும் 3820 பேர் என்ற அளவில்தான் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 2018-19 முதல் இத்திட்டம் அமலில் உள்ளது. ஆனால் பெரிய அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களுக்கு பலன் சென்று சேரவில்லை. இதுவரையில் 45 லட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். 60 வயது நிரம்பிய தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதம்  ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் ஒவ்வொரு மாதமும் 10ஆயிரம் பேர் முதல் 11 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துகொண்டிருந்த இந்தத் திட்டத்தில் இப்போது பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது மிக முக்கியமானது. இத்திட்டத்தில் இணைய ஒரு தொழிலாளி மாதம் ஒன்றுக்கு ரூ.55 முதல் ரூ.200 வரை தன்னுடைய பங்களிப்பாக செலுத்த வேண்டும். வேலையின்மை தீவிரமடைந்துள்ளது; கிடைக்கிற வேலைக்கும் வருவாய் பெரிய அளவிற்கு குறைந்துள்ளது. இதன் விளைவாக கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் அன்றாடவாழ்வுக்கே அல்லல்படுகிறார்கள். எனவே ஓய்வூதிய நிதிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பைச் செலுத்துவது இயலாத காரியமாக மாறியுள்ளது. எனவே அத்திட்டத்திலேயே சேர்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம், வருமான வரம்புக்குள் இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 நேரடியாக பண மானியம் வழங்குங்கள் என்று.

                                          *****************

புதன்கிழமை இரவுடன் நாடு முழுவதும் 60 கோடி டோஸ்கள் தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளதாக விபரம் வெளியாகி யுள்ளது. ஜனவரியில் துவங்கியது தடுப்பூசி செலுத்தும் பணி. 8 மாதங்கள் கழித்து இந்த நிலையைத்தான் தொட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் ஒருகோடிப் பேருக்கு தடுப்பூசி  செலுத்தியாக வேண்டும் என்பது கட்டாயமாகிறது. இதைத்தான்மோடி அரசிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். மூன்றாவது அலை பேரழிவு தடுக்கப்பட வேண்டுமானால் வேறுவழியில்லை. இப்போதாவது இந்த எச்சரிக்கையை மோடி அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். உடனடியாக டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் ஒரு கோடிபேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கி விட வேண்டும். 

;