politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

18 வயது முதல் 44 வயது வரையிலான மக்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனைகள் மூலமே தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசு அறிவித்துள்ள “கோவின்” (Co Win) இணையதளம் மூலமாக பதிவுசெய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 தேதியிட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனின் கடிதத்தில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு சுகாதார மையங்களில் 18-44 வயதினருக்கு தடுப்பூசி போடுவது என்பது மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தப்பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது முற்றிலும் பாரபட்சமானது. நமது மக்களில் பெருவாரியாக உள்ள வயதினரை தடுப்பூசி பெறுவதிலிருந்து வெளியேற்றுவது. இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் துயரத்தையும் மரணங்களையும் சுகாதார நெருக்கடியையும் மேலும் நீண்டகாலத்திற்கு தொடரச் செய்வதற்கான முடிவு இது. மோடி அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக துவக்கிட வேண்டும். அது மிக எளிதான காரியம்தான். ஆனால் ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறது? 

                                             ******************  

தடுப்பூசிகளின் விலைகளை, இந்தியாவின் இரண்டு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன. நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் அறிவித்திருப்பது போல வெளியில் தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இவர்கள் அரசாங்கத்திடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் 20 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தினர், விலை விபரங்களை குறிப்பிட்டுள்ளனர். அதற்கு முன்பே கூட எந்த அளவிற்கு விலை நிர்ணயிக்கலாம் என்பது குறித்து நிதி அமைச்சகத்துடன் தங்களது திட்டத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களது கூற்றுப்படி, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் - ஒரு டோஸ் தயாரிக்க உற்பத்தி செலவு சுமார் 4 டாலர் - அதாவது சுமார் ரூ.300 ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மீது 25 முதல் 30 சதவீதம் வரை லாபம் வைத்து விற்பது என்ற அடிப்படையில் ஒரு டோஸ்-க்கு ரூ.700 முதல் ரூ.750 வரை விலை நிர்ணயிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். 
இதுதொடர்பான செய்திகளிலிருந்து நமக்கு மற்றொரு உண்மையும் தெரிய வருகிறது. இந்த நிறுவனங்களிடம் ஏற்கெனவே சில நாடுகள் தடுப்பூசிகளுக்காக ஒப்பந்தம் போட்டுள்ளன. அந்த நாடுகளுக்கு ஒரு டோஸ் 15 டாலர் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிற்கு கொள்ளை லாபம் சம்பாதிக்கப்போகிறார்கள். இரண்டு தனியார் மருந்து நிறுவனங்களும் தங்களது மருந்துக்கான விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு மோடி அரசு தாராள அனுமதி வழங்கியிருக்கிறது. இதன்மூலம் அந்தக் கம்பெனிகளின் செயலுக்கு மோடி அரசும் துணைபோயுள்ளது. சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. நாட்டின் மிக மிக மோசமான ஒரு நெருக்கடி காலத்தில் நமது மக்களின் உயிர்களை பணயம் வைத்து தனியார் பெரும் மருந்து நிறுவனங்களின் லாபங்களுக்கு வழி செய்திருக்கிறார் பிரதமர் மோடி.நமக்கு தெரியும், ஊழல் மலிந்த, எந்தத் திறனுமற்ற, முற்றிலும் மோசமான முறையில் நிர்வகிக்கப்படுகிற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பெரும் கார்ப்பரேட் ஆதரவு கட்டமைப்பை யார் இயக்குகிறார்கள் என்று. 

                                             ******************  

பெருந்தொற்றை கையாளத் திறனற்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கிற, கும்பமேளா கூட்டத்தை விமர்சித்த டுவிட்டர் பதிவுகளை பொதுமக்களின் பார்வையிலிருந்து அகற்றும் விதத்தில் மோடி அரசின் உத்தரவிற்கேற்ப டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டிருக்கிறது. அரசாங்கம் செயல்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பியவர்களை உன்னிப்பாக கவனித்து அவர்களது கணக்குகளைமுடக்குவதற்கு அரசாங்கத்திற்கு நேரம் இருந்திருக்கிறது என்பது நமக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்தத் தருணத்தில் அரசாங்கத்தை விமர்சித்து பதிவிட்டால் அது ‘தேசவிரோதம்’ என்று கூறுகிறார்கள். மோடி அரசு அப்பட்டமாக தோல்வி அடைந்திருக்கிறது. அவர்கள் இந்த நாட்டிற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துவோம்.

;