politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2021 மார்ச் நிலவரத்தின்படி கடந்த 96 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதன்மை பொருட்களின் விலை உயர்வு பணவீக்கம் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.தொழிற்சாலை உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கடந்த 108 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த மிகக் கடுமையான பணவீக்கத்தின் விளைவாக பொருட்களின் விலைவாசி என்பது வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துகொண்டிருக்கும் நிலையில், பொருள் உற்பத்தி என்பது கணிசமான அளவுகுறைந்து வருகிறது. பொருள் உற்பத்தி வீழ்ச்சி, விலைவாசி உயர்வு இவற்றுடன் அதீதமான அளவு வேலையின்மையும் இணைந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்துடனும், பெருந்தொற்று பரவல் விகிதமும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவுபேரழிவு. அதனால்தான் மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறோம்.

                                        ***************

கடந்த ஆண்டு இந்தியா கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி அதை வீழ்த்தியது போலவே இந்த ஆண்டும் அதே நடைமுறைகளை பின்பற்றி,ஆனால் வேகமாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டு வீழ்த்திட வேண்டுமென்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். உண்மையாகவா பிரதமர்மோடி அவர்களே? கடந்த ஆண்டு கொரோனாவை வீழ்த்திவிட்டோம் என்றால் இப்போது ஏன் நாம் துயரகரமான நிலையில் இருக்கிறோம்? இப்போதும் கூட உங்களிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களை மரணத்தின்பிடியில் தள்ளுவதை நிறுத்துவதற்கு உங்களிடம் எந்த உத்தியும் இல்லை. பெருமளவில் மக்கள் கூடும் நிகழ்வுகளை நிறுத்துங்கள். உங்களது பெரும் பொய்களுக்கான மெகா தேர்தல் பேரணிகளை நிறுத்துங்கள். மக்கள் நலன்காக்க உங்களது தனியார் அறக்கட்டளை நிதியத்தில் குவிந்துள்ள நிதியைவெளியில் கொண்டு வாருங்கள்.இதையெல்லாம் செய்வதற்கு பதிலாக நீங்கள் மீண்டும் மீண்டும் உண்மைக்குமாறான விஷயங்களை சொல்கிறீர்கள். கடந்த ஆண்டு கொரோனா வீழ்த்தப்படவில்லை. அதற்கு மாறாக, கொரோனாவை தடுப்பதற்கான முக்கியமான தருணங்களை வீணடித்தீர்கள். இதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உங்களை முன்னிறுத்திக் கொள்வதில் தீவிரமாக இருந்தீர்கள். இப்போதும் கூட, பிரதமரும், உள்துறை அமைச்சரும் கொரோனா வைரஸ் ஈவிரக்கமில்லாமல் பரவுவதற்கு, எந்த கட்டுப்பாடுமின்றி பரவுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் உண்மை.

                                        ***************

மேற்குவங்க சட்ட மன்றத் தேர்தல்நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு தீவிரமடைவதன் காரணமாக, பெரிய அளவிற்கு கூட்டங்களை திரட்டுவதை தவிர்ப்பது என்று எமது கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழு முடிவுசெய்து அறிவித்திருக்கிறது. பெரிய கூட்டங்களுக்குப் பதிலாக வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வது, சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று எமது கட்சி அறிவித்துள்ளது. மேற்குவங்க காங்கிரஸ் கட்சியும் கூட இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்தியஉள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்? தேர்தல் பிரச்சாரத்தையும், கொரோனா பரவல் அதிகரிப்பையும் இணைத்து பேசாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அவர் கூறுவது எத்தனை அறிவிலிதனமானது; அறிவியல்பூர்வமற்ற, முட்டாள்தனமான பிதற்றல் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்திய மக்களின் உயிர்களை விட மோடியும்,அவரும் நடத்துகிற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முக்கியமானவையா?

                                        ***************

இந்தியா எப்படிப்பட்ட மிக மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்பதை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் வேத் மாலிக் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார். இது மிகப் பெரிய யுத்தம் போன்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். “நமது நாடு ஒரு யுத்தத்தில் இருக்கிறது. ஒரே நாளில் 1338 இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதற்கு முந்தைய நாள் 1182 பேர் பலி. இது கார்கில் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட 2.5 சதவீதம் அதிகம். இந்த சூழலில் நாடு இந்த யுத்தத்தின் மீது கவனம் குவித்திருக்கிறதா? இல்லை, தேர்தல் பேரணிகள், நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகள், விவசாயிகளின் மிகப் பெரிய போராட்டம், இந்திய செல்வ வளங்களை கைப்பற்றுவதற்கான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக எழுந்திடு இந்தியா” என்று ஜெனரல் வேத் மாலிக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி தனது தேர்தல் பயணத்தில் பிஸியாகஇருக்கிறார். மாநில முதலமைச்சர்களால் அவரிடம் பேச முடியவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் தனது நாடகப் பேச்சை அரங்கேற்றி முடித்துசென்ற பின்னர், கொரோனா தொற்று பரவல் மேலும் தீவிரமடைகிறது.இதைத்தான் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். மோடி, ஒரு பிரிவினைவாத கட்சியின் பிரச்சாரகராக செயல்படுவதற்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறார்; நாட்டின் பிரதமராக செயல்படுவதற்கு அல்ல. அதனால்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை தருகிறார். அன்றாடம் செய்தி சேனல்களின் முதன்மை செய்திகளில் தாம் இடம் பெற வேண்டுமென்பதில்தான் குறியாக இருக்கிறார்.எனவே வேகமாக பரவும் பெரும் தொற்றுக்கு இரையாகியுள்ள இந்தியர்களாகிய நாம் துரதிருஷ்டவசமாக ஒரு மத்திய அரசாங்கத்தை பெற்றிருக்காத மக்களாக இருக்கிறோம் என்று சொல்ல வேண்டியுள்ளது. மாறாக, நாம் பெற்றிருப்பது ஒரு செய்தி பரப்பும் கம்பெனி; நாம் பெற்றிருப்பது ஒரு தேர்தல்பிரச்சார கம்பெனி. அவ்வளவுத்தான்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் கூடுதல் கருத்துகளுக்கு,  

லிங்க் .....

 முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;