politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மக்களை மரண வாசலுக்கு அனுப்பும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை இத்தகைய தகர தடுப்புகள் மூலம் மறைக்க முடியாது. அதிகமாக மக்கள் கூடுவதையும் அனுமதியில்லாத கூட்டங்களையும் உடனே தடை செய்யுங்கள். நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் ஏழை மக்களுக்கு உடனே தாருங்கள். தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துங்கள். பி.எம்.கேர்ஸ். நிதியை மக்களின் சுகாதார வசதிகளுக்கு செலவிடுங்கள்.

                           **************

மக்கள் கோவிட் பெருந்தொற்றில் அல்லாடிக் கொண்டிருக்கும் பொழுது மத்திய சுகாதார அமைச்சர் கோமாதா அறிவியல் குறித்து கூட்டங்கள் நடத்தி கொண்டுள்ளார். மனிதர்களின் உயிரும் முக்கியம் அமைச்சர் அவர்களே!

                           **************

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் மாலை 7.00 முதல் காலை 10மணிவரை பிரச்சாரத்துக்கு தடை செய்துள்ளது.  இந்த நேர அளவைதேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பதை ஆணையம் விளக்குமா?

பிரதமரும் உள்துறை அமைச்சரும் அரசு செலவில் ஜெட் விமானத்தில் காலையில் தில்லியிலிருந்து கிளம்பி பகலில் பிரச்சார பேரணிகளை நடத்திவிட்டு மாலை தில்லி திரும்பிட வழிவகை செய்வதற்கு ஏதுவான நேரம் என்பதாலா?பெருந்தொற்று பரவுதல்தான் பிரச்சார நேரம் குறைவுக்கு காரணம் எனில் பெரும் பேரணி அல்லது கூட்டங்களுக்கு நாள் முழுதும் ஏன்  தடை செய்யக் கூடாது?

;