politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கோவிட் 19 இரண்டாவது அலை காரணமாக இடம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இவர்களுக்காக மத்திய அரசாங்கம் இலவச இரயில்கள் மற்றும் போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரடங்கு சமயத்தில் நிகழ்ந்த மனித இழப்புகள் மற்றும் சோகங்கள் மீண்டும் நிகழ்வதை தடுக்க வேண்டும். தொற்று பரவலை தடுப்பதும் முக்கியம். பிரதமரும் அரசாங்கமும் இரக்கமற்ற /மனிதாபிமானமற்ற அணுகுமுறையை கைவிட வேண்டும்.

                                       **************

கோவிட் 19-ஐ எதிர்கொள்வதில் பா.ஜ.க. ஆளும் உ.பி./குஜராத்மாநிலங்களில் நிர்வாகம் செயலிழந்து நிற்கின்றன. இந்த உண்மையை பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஊடகச் செய்திகளும் புகைப்படங்கள்/ காணொளிகளும் வெளிப்படுத்தும் உண்மை நிலைமைகளை எத்தகைய வாய்ப்பந்தலும் பொய்களும் மறைக்க முடியவில்லை. மோடியும் அமித் ஷாவும் மறைக்க இயலாத பா.ஜ.க. ஆட்சியின் இந்த கொடூரமானசூழல்களை வாக்களிக்கப் போகும் மக்கள் தெளிவாக உணர இயலும்.

                                       **************

உ.பி. மாநிலம் லக்னோவில் நிகழும் தகனமூட்டும் இந்த காணொளியும் அறிக்கைகளும் மிகுந்த மனவேதனை தருவதாக உள்ளன. பிரதமரின் சுயபெருமை பீற்றிக்கொள்வதற்காக நாம் தரும் மிகப்பெரிய விலை இது! அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் திறமையின்மையின் வெளிப்பாடு ! உ.பி. அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழிப்பது ஒருகிரிமினல் செயல்!

                                       **************

இது குஜராத் பாலன்பூர் மருத்துவமனையில்! ஒரு கேன்சர் நோயாளிக்கு கோவிட் தொற்று உறுதியானது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். ஆனால் அவருக்கு படுக்கை கிடைக்கவில்லை. எவரும் அவருக்குசிகிச்சையும் அளிக்கவில்லை. வாகனத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

;