politics

img

அசாமில் சிஏஏ சட்டம் பற்றி அமித் ஷா பேசத் தயாரா? காங். தலைவர் பிரியங்கா காந்தி சவால்

திஸ்பூர்:
நாடு முழுவதும் சென்று குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ) பற்றி பேசும், உள் துறை அமைச்சர் அமித் ஷா,அசாமில் அதுபற்றி வாய்திறப்பாரா? என்று உ.பி.மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார்.

அசாமில் காங்கிரஸ் - இடதுசாரிகள் இணைந்த ‘மஹாஜத்’ கூட்டணியை ஆதரித்து, பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதுபற்றி பேசியுள்ள பிரியங்காகாந்தி: “உள்துறை அமைச்சர்அமித் ஷாவுக்கு நாட்டின் ஒற்றுமை மற்றும் அசாமின் ஒற்றுமை ஆகியவற்றில் பிரச்சனை உள்ளது. அவர்,நாடு முழுவதும் ‘சிஏஏ’ மற்றும் ‘என்ஆர்சி’ சட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் அசாம் மாநிலத்தில் மட்டும் இதுகுறித்துப் பேசாமல் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு, ‘அசாமில் என்ஆர்சி செயல்படுத்தப்படாது’ என்றுமுன்பு பாஜக கூறியிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நிலத்தையும் அடையாளத்தையும் காப் பாற்ற அசாம் மக்கள் போராடுகிறீர்கள். ஆனால், இந்தமாநிலத்தின் ‘ஜெய் அசாம்’என்ற முழக்கத்தை பாஜகதனது கார்ப்பரேட் நண்பர் களுடன் இணைந்து அடக்கமுயல்கிறது. இங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் விமானநிலையங்களையும் எண் ணெய் வயல்களையும் தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு மோடி அரசு விற்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா, “அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நிச்சயம் ‘சிஏஏ’ அமல்படுத்தப்படாது” என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

;