politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீது 217 சதவீதம்வரியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் மக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் விலை உயர்வை நியாயப்படுத்துகிறார். பெட்ரோல் விலை உயர்வு தனக்கும் தர்மசங்கடமாக உள்ளது என அமைச்சர்கூறுகிறார். எந்த சங்கடமும் தேவை இல்லை. தீர்வு மிக எளிதானது. மக்களின் எதிர்ப்புக்கும் கோபத்திற்கும் மதிப்புக் கொடுங்கள். பெட்ரோல் மீது போடப்பட்டுள்ள சுங்க வரியை திரும்பப் பெறுங்கள்.

                                                    **************** 

பெட்ரோல் விலை உயர்வை தீர்க்க மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் சேர்ந்து முயல வேண்டும் என்கிறார் நிதி அமைச்சர்.பெட்ரோல் பொருட்களின் தாளமுடியாத விலை உயர்வு, மத்திய அரசாங்கத்தின் கலால் வரி உயர்வின் நேரடி விளைவு ஆகும். இந்த உயர்வில் மாநில அரசாங்கங்களுக்கு எந்தப் பங்கும் தரப்படுவது இல்லை.பெட்ரோல் மூலமாக மாநில அரசாங்கங்களின் வருவாய் விற்பனை வரி மூலம் வருகிறது. கலால் வரி உயர்வின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்தால் விற்பனை வரியும் உயர்கிறது. எனவே விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசாங்கம்தான்.மக்கள் இயக்கங்கள் மூலம் மத்திய அரசாங்கம் சுங்க வரியை திரும்பப் பெறநிர்ப்பந்திக்க வேண்டும்.

                                                    ****************

வழக்கம்போல மோடி பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய அரசாங்கங்கள் மீது பழி போடுகிறார். 2014 ஆம் ஆண்டு ஒப்பிடும்பொழுது இப்பொழுது கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்துள்ளது. பெட்ரோல் அடிப்படை விலையை ஒப்பீடு செய்தால் 2014ல் ரூ.47.12 ; இப்போது ரூ.29.34! அப்படியானால் தற்போது உள்ளதை விட பெட்ரோல் விலை 50% குறைவாக இருக்க வேண்டும். வரிகள் மூலம் விலையை உயர்த்திவிட்டு மோடி அரசாங்கம் மக்களை திசை திருப்ப முனைகிறது. மோடி அவர்களே! மக்களின் எதிர்ப்புக்கு தலை வணங்குங்கள். விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்.

                                                    **************** 

மாவீரன் பகத்சிங் அவர்களின் சித்தப்பா அஜித் சிங் அவர்களின்பிறந்த தினத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா கொண்டாடுவது சாலப் பொருத்தமானது. விவசாயிகளின் உரிமைகளுக்காக அவர் வழி நடத்திய பகடி சாம்பால் ஜாட்டா ஒரு புரட்சிகரமான போராட்டம் ஆகும். பிரிட்டிஷாரால் தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்ட அஜித்சிங் அவர்கள்  தனது ஆயுளின் பாதியை சிறையில் கழித்தார் இன்றைய விவசாயிகள் போராட்டத்தில் 140 ஆண்டுகளுக்கு முன்பு 1907ல் நடந்த அந்த போராட்டம் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;