politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பெட்ரோல் டீசல் விலை வானத்தை நோக்கி உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆசிய தேசங்களிலே இந்தியாவில்தான் அதிக விலை. பால்/காய்கறிகளின் விலை உயர்வு மாத ஊதியம் பெறுபவர்களின் வாழ்க்கையைக் கூட துன்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது. சிறிது கூட அக்கறையற்ற இந்த அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

                                              ********************  

குறைந்த தூர பயணத்துக்கு ரயில்வே அதிக கட்டணத்தை விதிப்பது மட்டுமல்ல; கோவிட் காலத்தில் பயணத்தை குறைக்க இந்த நடைமுறை என ரயில்வே நிர்வாகம் பசப்புகிறது. கோடிக்கணக்கான சாதாரண இந்திய மக்களுக்கு ரயில்வேதான் பொருளாதார உயிர் மூச்சு என்பதையும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தொடர்பு உருவாக்க ஒரே பயண சாதனம் ரயில்வே தான் எனும் அடிப்படை உண்மையிலிருந்து இந்த அரசாங்கம் எந்த அளவுக்கு வெகுதூரத்தில் சென்றுவிட்டது என்பதற்கு இந்த கட்டண உயர்வு ஒரு மேலும் ஒரு உதாரணம். இந்த கட்டண உயர்வையும் அதனை நியாயப்படுத்தும் வெட்கம் கெட்ட செயலுக்கும் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள். 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் ஆடம்பர அறிவிப்பை எவரும் இன்னும் மறக்கவில்லை.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;