politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்கனவே நன்மைகளை தரஆரம்பித்துவிட்டன எனவும் எதிர்கட்சிகள்தான் அரசியல் உள்நோக்கத்தோடு தவறான தகவலை தந்து கொண்டுள்ளனர் எனவும் பிரதமர் கூறிக்கொள்கிறார். நல்லது! பஞ்சாப் விவசாயிகள் உள்ளாட்சி தேர்தல்களில்பாஜகவை துடைத்தெறிந்ததன் மூலம் தமது பதிலை நிலைநாட்டியுள்ளனர்.

                                                  ********************     

மோடி அரசாங்கம் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட் டத்தை எவ்வளவு அதிகமாக சிறுமைப்படுத்துகிறதோ எவ்வளவுஅதிகமாக அடக்குமுறையை ஏவுகிறதோ அதற்கும் அதிகமாக மேலும் மேலும்கூடுதலான விவசாயிகள் உறுதியுடன் போராட் டத்தில் இணைந்த வண்ணம்உள்ளனர். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் புதியபகுதிகளுக்கு போராட்டம் பரவிக் கொண்டுள்ளது. சட்டங்களை திரும்பப்பெறுங்கள். விவசாயிகளுடனும் ஏனைய சம்பந்தப்பட்டவர்களுடனும்பேசுங்கள். நாடாளுமன்ற விவாதத்திற்காக புதிய சட்டவரைவுகளை கொண்டு வாருங்கள்.

                                                  ********************     

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பு இரண்டு மிக முக்கியமான உளவுத் தகவல்கள் அந்த தாக்குதல் குறித்து அரசுக்கு அனுப்பப் பட்டன. ஆனால் அரசு அந்த மிக முக்கியமான உளவு தகவல்கள் மீது எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலம் ஆகி உள்ளது. இரண்டுஆண்டுகள் கடந்துவிட்டன. 40 உயிர்கள் பறிபோயின. தேர்தல் ஆதாயத்துக்காக இந்த தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் நம்பத்தகுந்தஉளவு தகவல்கள் தரப்பட்டும் ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. இதற்கு யார்பொறுப்பு என்பதும் அரசியல் பொறுப்புதாரிகள் யார் என்பதும் நிலைநாட்டப்பட வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;