politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இன்னுமொரு வாய்ப்பந்தல்!     புதிய நிறுவனங்கள் தொடங்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என அறிவிப்பு!சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் என அறிவித்தனர். 21% பயனாளிகள்தான் சில நன்மைகளைபெற்றனர். 51% சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒன்று முதல் மூன்றுமாதங்களுக்கும் குறைவான நிதி தான் கையில் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. படாடோப  அறிவிப்பு! ஆனால் அமலாக்கம் என்பது இல்லை!

                                           *************

கோவிட் வைரசுக்கு எதிராக தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது என்பது மிகப்பெரிய நிம்மதி!   உலகம் முழுவதும் 51 தேசங்களில் நான்கு கோடிப் பேருக்கு தடுப்பூசி தரப்பட்டுள்ளது. எனினும் கோவாக்சின்  தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் அதன் பாதுகாப்பு/ செயல்திறன் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குப் பின்னால் இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது என்பதுதான் பொருத்தமான அறிவியல் அணுகுமுறை.

                                        *************

விவசாயத்துறை மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்ட முதலமைச்சர்கள்  கொண்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்யாமலேயே வேளாண் சட்டங்கள் முன்வைக்கப்பட்டன என தகவல் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்து மிக அதிகபட்ச கலந்தாலோசனை நடத்தப்பட்டது எனவும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை எனவும் பிரதமர் கூக்குரல் இடுகிறார். மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன என்று மந்திரிகள் நாடாளுமன்றத்தில் பொய் கூறினார்கள். ஆனால் உண்மை என்ன? எதிர்கட்சிகள்ஆதரிக்கவும் இல்லை; மாநில அரசாங்கங்களின் கருத்து கேட்கப்படவுமில்லை. 

                                     *************

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு பயங்கரம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆறு நாட்களில் மூன்று முறை கும்பல் பாலியல் பலாத்காரம். பாஜக ஆளும் மாநிலங்களில் மனிதத்தன்மையை குழி தோண்டிப் புதைக்கும் இந்த கொடுமைகள் அதிர்ச்சித் தரும் அளவுக்கு ஆழமாக சென்று கொண்டிருக்கிறது. குற்றம் செய்யும் மற்றவர்கள் பயப்படும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை என்பதுதான் உடனடித் தேவை. உத்தரப்பிரதேச/ மத்தியப்பிரதேச மாநில பாஜகமுதல்வர்கள் மக்களுக்கு எதிராக செயல்படுவதில் பதக்கங்கள்  பெற போட்டியிடுவதற்கு பதிலாக இத்தகைய குற்றங்களை தடுப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

 

;