politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பெருந்தொற்று மற்றும் பொருளாதார பெரும் வீழ்ச்சி ஆகிய இரு பெரும்துயரங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவாக, ஏற்பட்டதுயரங்களுக்கெல்லாம் முதன்மை துயரமாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கொடிய வரி விதிப்புகளின் விளைவாக மோடி அரசால் அடிக்கப்படுகிறமெகா கொள்ளை அமைந்திருக்கிறது.

தில்லியில் நிலவும் விலை நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், வரிகள் ஏதும் இல்லை என்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2014 மேமாதத்தில் ரூ.47.12 ஆக இருந்தது. தற்போதைய சர்வதேச கச்சா எண்ணெய்விலை வீழ்ச்சியடைந்த நிலையில், வரிகள் இல்லாமல் 2021 பிப்ரவரி நிலவரத்தின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 மட்டும்தான். 2014 உடன் ஒப்பிடும் போது 37 சதவீதம் சர்வதேச விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதுஇங்கும் பிரதிபலித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் மத்திய அரசு வரிகள்,தீர்வைகள், கமிஷன்கள் என அனைத்தையும் படிப்படியாக உயர்த்தி ஒட்டுமொத்தமாக 133 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வகையில் மட்டும் லிட்டர்ஒன்றுக்கு ரூ.24.29 முதல் ரூ.56.59 வரை கடுமையாக உயர்த்தப்பட்டு பெட்ரோல் - டீசல் விலையில் அது சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பாகமத்திய அரசால் விதிக்கப்படும் வரி இனங்கள் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் மீது 217 சதவீதம் ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது. வெறும் 30 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயை எட்டியுள்ளது.

மோடி அரசு தனது கூட்டுக் களவாணிகளுக்கு நாட்டின் செல்வங்களையெல்லாம் வாரி வழங்குகிறது. அதேவேளையில் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது கொடிய தாக்குதல்களை நடத்துகிறது. இதை தடுத்து நிறுத்தவும், பின்னுக்கு தள்ளவும் வெகுமக்கள் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம்.

                                                                   **********************

ஹிட்லரின் ஜெர்மனியின் பாதிரியார் நிமோல்லர், அங்கு நடந்த கொடுமைகளையும், சமூக நிலைமைகளையும் பற்றி இப்படி எழுதினார்: “முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளை குறிவைத்து வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்ல.பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை குறிவைத்து வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் தொழிற்சங்கவாதி அல்ல.பின்னர் அவர்கள் யூதர்களை குறிவைத்தார்கள். நான் அப்போதும் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு யூதன் அல்ல.கடைசியாக அவர்கள் என்னை குறிவைத்து வந்தார்கள். அப்போது எனக்காக பேசுவதற்கு யாருமில்லை.”- பாஜக அரசு திஷா ரவி உள்பட வரிசையாக கைது படலங்களை நடத்தி வருகிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நாம் குரல் கொடுத்ததாக வேண்டும்என்பதை பாதிரியார் நிமோல்லரின் வார்த்தைகள் நினைவுபடுத்துகின்றன.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;