politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நியூஸ்கிளிக் இணையதள இதழை முடக்கும் நோக்கத்தில் அமலாக் கத்துறை பாஜக அரசால் ஏவி விடப்பட்டுள்ளது. ஒரு சுயேச்சையான இணைய இதழை முடக்க நடக்கும் அப்பட்டமான முயற்சி இது. மோடி அரசாங்கம் அமலாக்கத் துறையும் ஏனைய புலன்விசாரணை அமைப்புகளையும் சுயேச்சையான ஊடக குரல்களை நசுக்குவதற்கு பயன்படுத்துகின்றது.இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

                                                           ******************

 பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல செயற்பாட்டாளர்களின் கணினிகள் நீண்ட நாட்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது. பொய்யான சாட்சியங்கள்அவர்களின் கணினிகளில் ஏற்றப்பட்டன. அதன் அடிப்படையில்தான் அவர்கள் தேசத்துரோக வழக்கு உட்பட பலவற்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிக மிக ஆபத்தான குற்றச்சாட்டு ஆகும். பொய்யான சாட்சியங்களைதிருட்டுத்தனமாக கணினிகளில் ஏற்றுவதும் பிறகு அவற்றின் அடிப்படையில் கைது செய்வதும் ஒரு இருண்ட கால சூழலை உருவாக்குகிறது. கைதுகள்குறித்து ஆழமான சந்தேகத்தை இது விளைவிக்கிறது. இதுகுறித்து நம்பத்தகுந்த நம்பகத்தன்மையுள்ள ஒரு உயர்மட்ட சுயேச்சையான விசாரணை தேவை.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;