politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வங்கிகளை தனியார்மயமாக்குதல் விரைவில் நடக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்கள் கடுமையாக உழைத்து ஈட்டிய சேமிப்புகளை கொள்ளையடித்தே தீருவது என மோடி அரசாங்கம் கங்கணம் கட்டி செயல்படுகிறது. வங்கிகள் தேசிய மயமாக்கம் உருவாக்கிய நிதி பாதுகாப்பை மறுப்பது என்பது கார்ப்பரேட் கூட்டு கொள்ளைகளவாணிகள் மேலும் செல்வத்தை கொள்ளை அடிக்க வசதி செய்வதாகும்.சாதாரண மக்களுக்கு நிதி பேரழிவை உருவாக்கும் வங்கி தனியார்மயத்தை உடனே கைவிட வேண்டும்.

                                                                  *****************  

பொதுத்துறைகளின் எண்ணிக்கை 300லிருந்து 20ஆக குறைப்பதற்கு மோடி அரசாங்கம் முனைப்பு காட்டிவருவதாக செய்திகள்வெளியாகியுள்ளன. பொதுத்துறையின் உரிமையாளர்கள் இந்திய மக்கள்தான். அரசாங்கங்கள் வரலாம் போகலாம். அரசாங்கங்கள் பொதுத்துறைக்கு வெறும் நிர்வாகிகள் மட்டும்தான். எந்த ஒரு நிர்வாகியும் உரிமையாளர் அனுமதி இல்லாமல் சொத்தை விற்க இயலாது. தேசிய சொத்துக்களை கொள்ளையடிக்க மக்கள் அனுமதி தரவில்லை. தனியார்மயத்தை வலுவாகஎதிர்ப்போம்

                                                                  *****************  

விசாகப்பட்டினம் உருக்காலையை 100% தனியார்மயமாக்க மோடிஅரசாங்கம் முடிவு. இது லாபம் ஈட்டும் நவரத்தினா நிறுவனம். 20,000 பேர் நேரடியாகவும்1,00,000 பேர் மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் ஆந்திராவில் தொடங்க வேண்டும் என மக்கள்நடத்திய போராட்டத்தில் 32 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். இவையெல்லாம் மோடி அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. தனது கூட்டு கொள்ளை களவாணிகளுக்கு பொதுத் துறைகளை தாரை வார்க்க வெறி கொண்டு செயல்படுகிறது மோடி அரசாங்கம். சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென மக்களின் நீண்ட போராட்டம் காரணமாக பொதுத்துறைகள் உருவாயின. தனியார்மய நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;