politics

img

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை....

“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடு உள்ளது. பாரதிய ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை இந்த அறிவிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. மேற்கு வங்கத்தில் தமிழ்நாட்டை விட 60 தொகுதிகள் தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல். ஆனால், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தலை நடத்த இருக்கிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.  அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது, பாஜக, சங்பரிவாரின் நோக்கங்களை அதிமுக செயல்படுத்துகிறது. 

இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் கேட்ட ராமதாஸ் எப்படி 10.5 சதவீதத்திற்கு ஒத்துக்கொண்டார். அப்படி என்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா? இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. தேர்தலுக்காக செய்யப்பட்ட ஒன்றாக, தேர்தல் நாடகமாகத் தான் தெரிகிறது.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்மால் அறிய முடியும். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மதுரை விமானநிலையத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசியது... 
 

;